பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§A.Eary. 7 போன நிமிஷம் தமிழ் அறிவொளி சற்றே மங்கியிருந்த தையும் நான் அறிவேன். ஆனால் போன நிமிஷம் போய்த் தொலைந்தது. இந்த நிமிஷம் சத்தியம் இல்லை. நாளை வரப்போவது சத்தியம். மிகவும் விரைவிலே தமிழின் ஒளி உலக முழுவதிலும் பரவாவிட்டால், என் ப்ேரை மாற்றி அழ்ையுங்கள்!" ஆன்ற மொழிகளி னுள்ளே-உயர் ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன் என்று தமிழின் பழமையையும் பெருமையையும் குறிப் பிட்ட பாரதியார், யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் என்றும், தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார் இங்கமரர் சிறப்புக் கண்டார் o - -தமிழ் : 4 என்றும், சொல்லில் உயர்வுதமிழ்ச் சொல்லே-அதைச் தொழுது படித்திடடி பாப்பா - , i. -பாப்பாப் பாட்டு : 1 என்றும் , தம் - தமிழ்மொழிப் பற்றினைப் புலப்படுத்தி யுள்ளார். தமிழ்ப் பெருங்கவிஞர்பால் தண்டாத காதல் கொண்டவர் பாரதியார். கம்பர் வள்ளுவர் இளங்கோவைப் போலப் பூமியில் எங்கும் புலவர் இதுகாறும் பிறந்ததில்லை என்கிறார் கவிஞர்.