பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 பாரதியும் பாரதிதாசனும் கன்னிய ராகி நிலவினி லாடிக் களித்தது மிக்காடே என்கிறார். மன்னு மிமயமலை யெங்கள் மலையே என்றும், மாநில மீதது போற் பிறிதிலையே என்றும், இன்னறு நீர்க்கங்கை யாறெங்கள் யாறே என்றும், - இங்கிதன் மாண்பிற் கெதிரெது வேறே என்றும் பரவசத்துடன் பாடும் பாரதி, பூரண ஞானம் பொலிந்த கன்னாடு புத்தர் பிரானருள் பொங்கிய நாடு பாரத நாடு பழம்பெரு நாடே பாடுவ மிஃதை மெய்க்கிலை யீடே என்றும் பாடிப் பாடிப் பெருமிதம் கொள்கிறார். மேலும் சத்ரபதி சிவாஜி, தன் சைல்சியத்திற்குக் கூறியதாக அவர் எழுதும் பாடலில், பாரத பூமி பழம்பெரும் பூமி நீரதன் புதல்வர். இக் நினைவகற் றாதீர் பாரத காடு பார்க்கெலாம் திலகம் நீரதன் புதல்வர்; இக் கினைவகற் றாதீர் என்று மீண்டும் மீண்டும் குறிப்பிடுகின்றார். புன்னாக வராளி' இராகத்தில் அமைந்த பாரத தேசம்’ என்ற பாடலில் பாரதியின் நாட்டு ஒருமைப் காட்டுணர்ச்சி தெளிவுறத் திகழ்வதனைக் காணலாம்.