பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 7. பாரதியார் கண்ட சமுதாயம் "புவியனைத்தும் போற்றிட வான்புகழ் படைத்துத் தமிழ்மொழியைப் புகழிலேற்றும் கவியரசர் தமிழ்நாட்டுக் கில்லையெனும் வசை” தனை நீக்க வந்த வண்டமிழ்க் கவிஞர் மகாகவி பாரதியார் ஆவார். "எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய சந்தம், பொதுஜனங்கள் விரும்பும் மெட்டு, இவற்றினையுடைய காவியமொன்று தற்காலத்திலே செய்து தருவோன் நமது தாய் மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகின்றான்" என்று தம் பாஞ்சாலி சாதம் முன்னுரையில் கூறும் பாரதியார், h "சுவை புதிது பொருள் புதிது வளம் புதிது சொற்புதிது சோதிமிக்க கவகவிதை எங்காளும் அழியாத மகா கவிதை" என்று எட்டையபுரம் மன்னருக்கு எழுதிய சீட்டுக்கவி ஒன்றில் தமது கவிதைகளைப் பற்றித் தாமே திறனாய்வு செய்துள்னார். 1. பாரதியார் கவிதைகள், ஒலைத்துக்கு, 2. பாரதியார் கவிதைகள்; அனுபந்தங்கள், 3. பாரதியார் கவிதைகள், ஓலைத்துக்கு,