பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

M.carr. 粤岛 தம்மை சூழ்ந்திருந்த சமுதாயத்தை மறந்து எங்கேயோ பார்த்து, எதையோ நினைத்து, எவ்வாறோ பாடிய புலவர்கள்போல் பாரதி பாடவில்லை. தம்மைச் குழயிருந்த சமுதாயத்தை உற்று நோக்கினார்; அவர்கள் இழிநிலையை அவர்களைப் பிணித்திருக்கும் சிறுமைக் கட்டுகளை நினைந்தார்; அவர்களும் சுவைத்து இன்புறத் தக்க நிலையில் பாடினார்." - வாஞ்சையுண்டோ வயதங்ங்னமே இரு பத்திரண்டாமளவும் வெள்ளைப் பண்மகள் காதலைப் பற்றி கின்றேன்" என்னும் பாடல் அவர் உள்ளம் கருதுமளவுக்குச் சிறந்த படைப்பு எதனையும் தம் இருபத்திரண்டாம் ஆண்டு வரையிலும் படைக்கமுடியவில்லை என்பதனைக் காட்டி, நிற்கிறது. s ஒவ்வொரு மொழி இலக்கியத்திலும் சில நூற்றாண்டு களுக்கு ஒருமுறை தோன்றி விளங்கும் புலவர் வரிசையில் வைத்து எண்ணத்தக்க பெரும்புலவர் பாரதி. "வ உ. சிதம்பரம் பிள்ளையின் பேச்சையும் பாரதியின் பாட்டையும். கேட்டால் செத்த பிணம் உயிர் பெற்றெழும்; அடிமைப்பட்ட நாடு ஐந்து நிமிடங்களில் விடுதலை பெறும்; புரட்சி ஓங்கி எழும்" என வ.உ.சி. வழக்கில் நீர்ப்புக் கூறிய ஆங்கில நடுவர் ஒருவரே கூறியிருக் கிறாராம்." கவிஞர்களில் மூவகையினர் உண்டு. நாடு இருந்த பழைய நிலையைப் பாடுவோர் ஒருவகையினர்; நாடு இப் 4. ப. அருணாசலம், கவியரசர் பாரதி, பக். 1. 5. பாரதியார் கவிதைகள், மூன்று காதல், .ே கவியரசர் பாரதி, பக். 58