பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 பாரதியும் சாரதிதாசனும் போது இருக்கின்ற நிலையைப் பாடுவோர் மற்றொரு வகையினர்; நாடு இந்த நிலையையும் இருக்கின்ற நிலையையும் கூறி இனி இருக்கவேண்டிய நிலையையும் எடுத்துக் கூறுவோர் பிறிதொரு வகையினர். இதில் மூன்றாவது வகையினரைச் சேர்ந்தவர் மகாகவி பாரதியார். பாரத சமுதாயம் தன்னைப் பிணித்திருக்கும் எல்லாச் சிறுமைக் கட்டுக்களிலிருந்தும் விடுதலை பெற்று முன்னாள் போல் ஆன்ம உணர்வில் தலைநிற்க வேண்டு மென்றே விரும்புகிறார். எண்ணமெல்லாம் நெய்யாக எம்முயிரின் உள்வளர்த்த வண்ணவிளக்காகவே சுதந்திர வுணர்வைப் பாடுகிறார். * தீரத்திலே படைவீரத்திலே-நெஞ்சில் ஈரத்திலே உபகாரத்திலே சாரத்திலே மிகு சாத்திரம் கண்டு தருவதிலே உயிர் நாடான தம்நாடு சுதந்திரமிழந்து நிற்கும் நிலை பாரதிக்குப் பெரிதும் வருத்தத்தைத் தருகிறது. "பின்னமுற்றுப் பெருமையிழந்தது கின் சின்னமற்றழி தேயத்தில் தோன்றினேன்" என மனம் நைந்து பாடுகிறார். இவ்வாறு பிறந்த நாட்டுப்பற்று இன்றைய சிறுமையை அகற்றிப் பண்டைய ஒளியுடைய பாரதத்தைக் காணத் துடிக்கிறது. இன்றைய சிறுமைகள் அனைத்தையும் சீறுகிறார். 7. பாரதியார் கவிதைகள் சுதந்திரதேவின் துதி.