பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பி.பா. 97 இறையருளும் சமநிலை எண்ணமும் 'ஒன்று பரம்பொருள் காம்.அதன் மக்கள் உலகின்பக் கேணி' ான்றும் முன்னர் கம திச்சையினாற் பிறந்தோமில்லை முதலிறுதி இடைகமது வசத்தில் இல்ல்ை” என்றும் இறையருளை உணர்ந்த தெளிந்த ஞானம் பாரதியாருக்கு இருந்தது. அதனால் ஜாதி மதங்களைப் பாரோம்-உயர் ஜன்மம் இத் தேசத்தில் எய்தினர்ாயின் வேதியராயினும் ஒன்றே-அன்றி வேறு குலத்தின ராயினும் ஒன்றே என்று கருதினார். தன்மையொன்றி லாததுவாய்த் தானே ஒருபொருளாய்த் தன்மைபல வுடைத்ததாய்த் தான்பலவாய் நிற்பதுவாய் இருக்கும் இறைவனை' வழிபட, காவித்துணி வேண்டா, சுற்றைச் சடை வேண்டா, பாவித்தல் போதும் பரமநிலை யெய்து தற்கே, சாத்திரங்கள் வேண்டா சதுமறைகளேது மில்லை, தோத்திரங்களில்லையுளந் தொட்டு நின்றாற் போதுமடா" என்று புதுநெறி காட்டுகின்றார். இறைவினை வணங்கும்போது ஆசையைக் கொல் விதும், புலை அச்சத்தைக் கொன்று பொசுக்குவதும், கெட்ட பாசத்தை அறுப்பதும் உயர் நோக்கங்களாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறார். 8. பாரதியார் கவிதைகள்; 9. பாரதியார் கவிதைகள்; 10. பாரதியார் கவிதைகள்; 11. பாரதியார் கவிதைகள்; பா.பா.-7