பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. நேசக் கrயாரின் மூட பக்தி' 11 பிப்ரவரி 1921 'ரெயிக் ஸ்தாக்" என்ற ஜெர்மன் ஜனப் பிரதிநிதி களின் ஸ்பையில் ஹெர் வோன் ஸிமோன்ஸ் என்ற ஜெர் மானிய மந்திரி சில தினங்களின் முன்பு நேசக் ககதியாரின் பாரீஸ் ஸமாஜத்தில் முடிவு செய்யப்பட்ட நஷ்டஈட்டுத் தொகைகளைப் பற்றிப் பேசுகையில், ஜெர்மனியுடன் ஸ்மரஸமான வாதங்கள் செய்து பெறக்கூடியதைக் காட்டிலும் ஜெர்மனிக்குக் 'கட்டாை' பிறப்பிப்பதனல் அதிகம் பெறக்கூடுமென்ற மூட பக்தியை நேசக் ககதியார் நீக்கி விடுதல் தகுமென்று எச்சரிக்கை செய்தார். ஏற்கெனவே ப்ருஸ்ஸெல்ஸ் நகரத்தில் நடைபெற்ற அர்த்த சாஸ்த்ர நிபுணர்களின் ஸங்கத்தில் ப்ரெஞ்ச் பிரதிநிதி யாகிய பூரீமான் லேது என்பவரால் திட்டஞ் செய்யப் பட்டு மற்ற ஆங்கில, ப்ரெஞ்ச் அதிகாரிகளாலும் அங்கீ கரிக்கப் பெற்றிருக்கும் ஏற்பாட்டை நேசக் கrயார் இங்ங்ணம் திடீரென்று கைவிட்டு விட்டதைக் குறித்து ஹெர் வோன் ஸிமோன்ஸ் வியப்புத் தெரிவித்தனர். லண்டனில் நடத்தப்போகிற ஸ்பைக்கு ஜெர்மன் பிரதிநிதி களையும் அழைக்கப் போவதாக மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜ் தெரிவித்திருந்தார். அதாவது, பாரீஸ் ஸமாஜத்தின் தீர்மானங்களை ஜெர்மானியர் ஒப்புக் கொள்வாராயின் பிறகு லண்டன் ஸ்பைக்கு அவர்களைப் பிரதிநிதிகளனுப்பும் படி கேட்கவேண்டுமென்பது மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜின் கருத்து. ஆனல் அதன் ஸம்பந்தமான அழைப்புக் கடிதம் இன்னும் தங்கள் வசம் கிடைக்கவில்லையாதலால், அந்த ஸ்பையில் சேர்வதா, அல்லது அதை பஹறிஷ்காரம் செய் வதா என்பதைக் குறித்து இன்னும் ஜெர்மானியர் நிச்சய முரைக்க இயலாதென்று வோன் ஸிமோன்ஸ் கூறினர்