பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115 ரெயிக் ஸ்தாக்கில் மேற்கூறிய பூரீ ஸிமோன்ஸின் உபந்யாஸம் இந்த மாஸம் (பெப்ருவரி) முதல் தேதியன்று நடைபெற்றது. அதே முதல் தேதியன்று ஐர்லாந்தில் கார்க் நகரத்தில் ராணுவ விசாரணைக் கொலைத் தண்டனை யொன்று நிறைவேற்றப்பட்டது. ராணுவ விசாரணையின் கீழ் இதுதான் முதலாவது கொலைத் தண்டனை யென்று ராய்ட்டர் தெரிவிக்கிருர். கொரி யென்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவனிடம் அனுமதிச் சீட்டில்லாத கைத் துப்பாக்கி யொன்றிருந்ததாகக் குற்றஞ்சாற்றி, அக் குற்றத்துக்காக அவனுக்கு மரணதண்டனை விதிக்கப் பட்டிருக்கிறது. அடக்கு முறைகளால் ஐர்லாந்துக் கலகத்தை நசுக்கிவிடத் தீர்மானஞ் செய்திருக்கிருர் களென்று இதல்ை நன்கு விளங்குகிறது. இதைத்தான் நாம் பரம மூடபக்தியென்று சொல்லுகிருேம். ஜனங்கள் ஏற்கெனவே கொடுமையை எதிர்த்துக் கலகம் புரியும் போது, அந்தக் கலகத்தை அடக்க இன்னும் அதிகக் கொடுமையை வழங்குதல் உபயோகமற்ற-தீமையை மிகுதிப் படுத்தக் கூடிய-முறை யென்பதை உலக சரித்திரம் மீட்டும், மீட்டும், மீட்டும் எத்தனையோ திருஷ்டாந்தங்களால் விளக்கி யிருக்கிறது. எனிலும் அதே முறையைத்தான் ஸிரியாவில் ப்ரான்ஸ் தேசத்தார் கையாள முயலுகிருர்கள். மெஸ்பொடோமியாவிலும் அரபியாவிலும் ஆங்கிலேயர் அதைத்தான் கையாண்டு வருகிரு.ர்கள். கிரேக்கர் துருக்கியில் அதே கிரீடை செய்து வருகிருர்கள். அச்சம், சினம் முதலிய சித்த விருத்திகள் தோன்றும் போது ஸாதாரண மனிதர் புத்தி தவறி வேலை செய்தல் ஸஹஜம். அந்த ஸ்மயத்தில் ஜனங்களுக்கு யுக்தி, அனுபவம், சாஸ்திரம் என்ற மூன்று வித ப்ரமாணங்களும் மறந்துபோய் விடுகின்றன. எனவே புத்தி ஹீனமான கார்யங்கள் செய்து பெரிய நஷ்டங் களுக்குள்ளாகின்றனர்.