பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 30 ஆரிய புத்திரர்களே! தூங்கிக்கொண்டா இருக்கிறீர்கள்? இந்த மானமற்ற பிழைப்பு இன்னும் எத்தனை காலம் பிழைக்கவேண்டுமென்று உத்தேசித்திருக்கிறீர்கள்! நன்றி : பாரதி தரிசனம்-முதற்பாகம் 35. ரூஸ்வெல்ட் அதிபரும் ஜப்பானும் டிசம்பர் 8, 1906 அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அதிபராகிய மிஸ்டர் ரூஸ்வெல்ட் (தியோடார் ரூஸ்வெல்ட்) இந்த வாரத்தில் முக்கிய மந்திராலோசனை சபைக்கு (காங்கிரஸ்) அனுப்பிய கடிதம் அநேக விஷயங்களில் நன்கு கவனிப்பதற்குரியது. ரூஸ்வெல்ட் அதிபர் மிகுந்த தீரத்தன்மையுடையவர். தேச ஜனங்களின் மனதிற்கு வருத்த முண்டாகுமென்பதற்காக பயந்து உன்மைகளை மறைத்துக் கூறும் வழக்கமுடைய வரல்ல. சமீபத்தில் ஸான்பிரான்சிஸ்கோவில் கவர்ன் மெண்ட் பாடசாலைகளிலிருந்து ஜப்பானியர்களை விலக்கின அநீதிகளைப்பற்றி இவர் மிகுந்த கோபத்துடன் எழுதியிருக் கின்ருர். ஜப்பானியர்களிடம் அநாவசியமான விரோதம் பாராட்டும் அமைச்சர்களை மூர்க்கர்கள் என்றுபேசுகின்ருர். ஐக்கிய நாடுகளின் மத்திய கவர்ன்மெண்டார் வெளி தேசத்தாருடன் செய்து கொள்ளும் உடன்படிக்கை நிபந்தனைகள் ஒவ்வொரு தனி மாகாணமும் அனுஷ்டிக்கும் படி செய்ய இப்போது விதியேற் படுத்தப்படாமலிருக் கின்றது. எனவே, ரூஸ்வெல்ட் அதிபர் ஜப்பானியர்களை விலக்காமல் அவர்களுடன் சஹோதர பாவமாக நடந்து கொள்ள வேண்டுமென்று விரும்பிய போதிலும், காலி போர்னியா என்னும் ஒற்றை மாகாணத்தின் கவர்ன்