பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 0 பாரத தேசம் பாரதியாருடைய கனவில் எப்படி ஒரே நாடாக உருவெடுக்கின்றது என்பதை பாரதியும் பாரத தேசமும் என்ற நூலில் பார்த்தோம். பாரதியாருடைய எண்ணங்களையும், ஆசைகளையும் நிறைவேற்றியிருந்தால் இதற்குள் பாரதம் ஒரு மகத்தான தேசமாக ஆகியிருக்கும். அங்கு தொழில் உண்டு. ஆனுல் சாதிப் பிரிவுகள் இல்லை. எல்லாத் தோழிலும் சமமாக மதிக்கப்படும்-ஏற்றத் தாழ்வு இல்லை. பெண்களுக்குச் சம உரிமை உண்டு; அவர்கள் ஆண் களோடு போட்டி போட்டுக் கொண்டு எல்லாத் தொழில் களும் செய்து நாட்டை உயர்த்துவார்கள். பல சமயங்கள் உண்டு; ஆனல் அவற்றிற்குள்ளே பூசல் இராது. பொய் மதச் சடங்குகள், குருட்டு நம்பிக்கைகள் அடியோடு மறைந்துவிடும். இறைவன் ஒருவனே. அவனுக்கு ஒவ்வொருவனும், ஒவ்வொருத்தியும் தனக்கு விருப்பமான வடிவில் பெயர் வைத்து வணங்கலாம். இந்தியா உலகுக்கு வழிகாட்டியாக அமையும். இதுவே பாரதியாரின் கனவு. அந்தக் கனவை அற்புத மான, உணர்ச்சி மிக்க கவிதைகளிலும் உரை நடையிலும் அவர் வடித்து நமக்களித்திருக்கிரு.ர். பாரதியாருடைய பரந்த நோக்கம் பாரத தேசத்தோடு மட்டும் நின்று விடவில்லை.