பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I9 இவ்வாறு பாரதியார் எழுதுவதைக் காணும்போது நமக்கே வியப்பாக இருக்கிறதல்லவா? இன்று நம்மிடையே உலவிவரும் தமிழ் நாளிதழ்களைப் பாருங்கள். அநேகமாக உலக நடைமுறைகளைப் பற்றி ஒன்றுமே இராது. ஏதாவது நில நடுக்கம் அல்லது விமான விபத்து என்று மட்டும் வரும். அயல் நாடுகள் எவ்வாறு இயங்குகின்றன என்ற தகவல்களைக் காண இயலாது. பாரதியார் அன்று உலக நடைமுறைகளைக் கூர்ந்து நோக்கி எழுதியது அவருடைய மனிதாபிமானம் என்ற பரந்த நோக்கிலே முக்கியமாக எழுந்ததாகும். லார்டுகர்ஸன் இந்திய வைஸ்ராயாக 1899 முதல் 1905 வரை இருந்தவர்; வங்காளப் பிரிவினைக்குக் காரணமா யிருந்து அதை அமல் செய்தவர்; பல அநீதிகளைச் செய்த வர். இவரைப் பற்றி காரசாரமாகக் கண்டித்து பாரதி யார் தமது இந்தியா வார இதழிலே எழுதியிருக்கிரு.ர். இருந்தாலும் இவருடைய மனைவியார் இறந்த காலத்தில் பாரதியார் தமது அனுதாபத்தைத் தெரிவிக்கத் தவற வில்லை. "லார்டுகர்ஸனும் அவரது மூன்று குழந்தைகளும் அடையக் கூடிய துக்கத்தை நினைக்கும்போது எவரும் பரிதாபம் அடையக் கூடும்” என்று தமது இந்தியா வார இதழில் எழுதியுள்ளார். 'உலகத்து மனிதர்கள் எல்லோரும் ஒரே ஜாதி, இந்தச் சண்டையில் (முதல் உலக யுத்தத்தில்) இத்தனை ஐரோப் பியர் அநியாயமாக மடிகிருர்களே என்று நான் கண்ணிர் சிந்தியதுண்டு. இத்தனைக்கும் சுதேசியத்திலே கொஞ்சம் அழுத்தமானவன். அப்படியிருந்தும் ஐரோப்பியர் மடிவதில் எனக்கு சம்மதம் கிடையாது. எல்லா மனிதரும் ஒரே வகுப்பு”