பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 லிருந்தது பற்றியே உங்கள் தேசத்தை அந்நியர் வென்று கைப்பற்றிக் கொள்ள நீங்கள் தோற்றுக் கிடக்கிறீர்கள்' என்ருன். "நாங்கள் இப்போது புழுதியோடு புழுதியாக விழுந்து கிடந்தாலும் எங்கள் பூமி புண்ணிய பூமி. உங்களுடைய செல்வத்தின் மேலே தெய்வசாபமிருக்கிறது' என்று ரவீந்திரநாதடாகுர் அவருக்கு மறுமொழி சொன்னுராம். அதாவது, இந்த நிமிஷத்தில் செல்வத்திலும், பெருமை யிலும் நம்மைக் காட்டிலும் அமெரிக்கா தேசத்தார் உயர்வு பெற்றிருந்த போதிலும் இந்த நிலைமை எப்போதும் மாருமலிருக்கு மென்று அமெரிக்கர் நினைப்பது பிழை. நாங்கள் தெய்வத்தையும் தர்மத்தையும் நம்பியிருக்கிருேம். கீழே விழுந்தாலும் மறுபடி எழுந்து விடுவோம். அமெரிக்கா விழுந்தால் அதோ கதி. ஆதலால் இனிமேலே னும் ஹிந்து தர்மத்தை அனுசரித்து உலக முழுவதிலும் எல்லா தேசத்தாரும் உடன் பிறப்பென்றும் சமான மென்றும் தெரிந்து கொண்டு, பரஸ்பரம் அன்பு செலுத்தி ல்ை பிழைக்கலாமென்று ரவீந்திரர் அவர்களுக்குத் தர்மோபதேசம் செய்கிரு.ர். வெளித் தேசத்தாருக்குத் தர்மோபதேசம் செய்கை யில் நமது நாட்டில் குற்றங்கள் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கலாமா? இங்கே அநாவசியமான ஜாதி விரோதங்களும் (அன்புக் குறைவுகளும்) அவமதிப்புகளும் வளர விடலாமா? அவற்றை அழிதது உடனே அன்பையும் உடன் பிறப்பையும் நிலை நாட்டுவது நம்முடைய கடமை யன்ருே?