பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 ரசனைச்சுவை என்னும் மதிப்புமிக்க நூலை எழுதிய வ. வே. சு. ஐயர் அவர்கள். பாரதியாருடைய குழந்தை அன்பு இதில் மிகத் தெளிவாகத் தெரிகின்றது. அழுது கொண்டு வந்த சகுந்தலா (பாப்பா)விற்கு மகிழ்ச்சியுண் டாகும்படி பாப்பா பாட்டுப் பாடியிருக்கின்ருர் பாரதியார். வாழ்க்கையில் கடைப்பிடிப்பதற்கு இது ஒன்றே போதும். பாப்பா பாட்டு, முரசு என்பன விலைமதிக்க முடியாத ரத்தினங்கள் ஆகும். ஒரு சமயம் பாப்பா நோய்வாய்ப்பட்டு இருந்தபோது, தான் புழுப்போல் துடித்ததாகக் கூறுகின்ருர் நம் கவிஞர். இதில் இருந்து குழந்தைகளிடம் எவ்வளவு அன்பு கொண் டிருக்கிருர் எனத் தெரியவருகின்றது. ஒவ்வொரு சொல்லும் மணி மணியாக விழுந்திருக்கிறது இக்கவிதையிலே. இதைப் பல சங்கீத வித்வான்கள் மேடையிலே கையாண்டு மேலும் சிறப்புறச் செய்திருக்கிருர்கள்.) சின்னஞ் சிறு கிளியே, - கண்ணம்மா! செல்வக் களஞ்சியமே! என்னைக் கவிதீர்த்தே - உலகில் ஏற்றம் புரிய வந்தாய்! l பிள்ளைக் கனியமுதே, . கண்ணம்மா பேசும்பொற் சித்திரமே! அள்ளி யணைத்திடவே - என் முன்னே ஆடி வருந் தேனே! 2 ஓடி வருகையிலே - கண்ணம்மா! உள்ளங் குளிரு தடி! ஆடித் திரிதல் கண்டால் - உன்னைப்போய் ஆவி தழுவு தடி! 3