பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42. கண்ணம்மா-அங்க வர்ணனை (குறிப்பு : பாரதியாருக்கு கண்ணம்மா ஒர் அழகின் வடிவமாகத் தென்படுகிருள். ஆகையால் அதை நினைக்கும் பொழுது பாரதியாருக்கு உற்சாகம் பொங்கிவிடுகிறது. கண்ணன் பாட்டு என்ற நூலிலும், கண்ணம்மா என் காதலி என்று பல அழகிய பாடல்கள் இயற்றியுள்ளார். இதுவும் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த அங்க வர்ணனையாகும்.) 1. பல்லவி எங்கள் கண்ணம்மா நகை புது ரோஜாப் பூ: எங்கள் கண்ணம்மா விழி இந்த்ர நீலப் பூ: எங்கள் கண்ணம்மா முகஞ் செந்தாமரைப் lo எங்கள் கண்ணம்மா நுதல் பால ஸஅர்யன். சரணங்கள் எங்கள் கண்ணம்மா எழில் மின்னலை நேர்க்கும்; எங்கள் கண்ணம்மா புருவங்கள் மதன் விற்கள்; திங்களை மூடிய பாம்பினைப் போல செறி குழல்: இவள் நாசி எட் பூ. (எங்கள்) மங்கள வாக்கு நித்யானந்த ஊற்று: மதுர வாய் அமிர்தம்; இத ழமிர்தம்: ஸங்கீத மென்குரல் ஸரஸ்வதி வீணை; சாய லரம்பை; சதுர் அயிராணி. (எங்கள் ) இங்கித நாத நிலையமிரு செவி; சங்கு நிகர்த்த கண்டம் அமிர்த சங்கம்: மங்களக் கைகள் மஹா சக்தி வாஸம்: வயி முலிலை; இடை அமிர்த வீடு. எங்கள்