பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97 காதல் காதல் காதல் காதல் போயில் காதல் போயில் சாதல் சாதல் சாதல் என்ற குயில் பாட்டின் வரிகளும் இங்கு நோக்கத்தக்கன) பாயுமொளி நீ எனக்கு, பார்க்கும் விழி நானுனக்கு: தோயும் மது நீ யெனக்கு, தும்பியடி நானுனக்கு: வாயுரைக்க வருகுதில்லை, வாழிநின்றன் மேன்மையெல்லாம் தூயசுடர் வானெளியே! சூறையமுதே கண்ணம்மா! I வீணையடி நீ எனக்கு, மேவும் விரல் நானுனக்கு: பூணும் வட நீ யெனக்கு, புதுவயிரம் நானுனக்கு: காணுமிடந்தோறு நின்றன் கண்ணிைெளி வீசுதடி! மானுடைய பேரரசே! வாழ்வு நிலையே! கண்ணம்மா! 2 வானமழை நீ யெனக்கு, வண்ணமயில் நானுனக்கு பானமடி நீ எனக்கு, பாண்டமடி நானுனக்கு: ஞானவொளி வீசுதடி, நங்கை நின்றன் சோதிமுகம்: ஊனமறு நல்லழகே! ஊறு சுவையே! கண்ணம்மா! 3. வெண்ணிலவு நீ யெனக்கு, மேவு கடல் நானுனக்கு: பண்ணுசுதி நீ யெனக்கு, பாட்டினிமை நானுனக்கு: எண்ணியெண்ணிப் பார்த்திடிலோt எண்ணமிலை (நின் சுவைக்கே கண்ணின்மணி போன்றவளே! கட்டியமுதே! கண்ணம்மா!4 வீசுகமழ் நீ யெனக்கு, விரியுமலர் நானுனக்கு: பேசுபொருள் நீ யெனக்கு, பேனுமொழி நானுனக்கு: நேசமுள்ள வான்சுடரே! நின்னழகை யேதுரைப்பேன்? ஆசை மதுவே, கனியே, அள்ளு சுவையே கண்ணம்மா! 5 பா. க.-7