பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99 தாருக வனத்தினிலே - சிவன் சரண நன் மலரிடை யுளம் பதித்துச் சீருறத் தவம் புரிவார் - பர சிவன் புகழமுதினை யருந்திடுவார்: பேருயர் முனிவர் முன்னே - கல்விப் பெருங்கடல் பருகிய சூதனென்பான் தேரு மெய்ஞ் ஞானத்தினல் - உயர் சிவநிகர் முனிவரன் செப்புகின்ருன்: வாழிய, முனிவர்களே, புகழ் வளர்ந்திடுஞ் சங்கரன் கோயிலிலே, ஊழியைச் சமைத்த பிரான் - இந்த உலக மெலா முருக்கொண்ட பிரான், ஏழிரு புவனத்திலும் - என்றும் இயல்பெறும் உயிர்களுக் குயிராவான், ஆழு நல்லறிவா வான், - ஒளி யறிவினைக் கடந்த மெய்ப் பொருளாவான், தேவர்க் கெலாந்தேவன், . உயர் சிவ பெருமான் பண்டொர் காலத்திலே காவலி னுலகளிக்கும் . அந்தக் கண்ணனுந் தானுமிங் கோருருவாய் ஆவ லொடருந் தவங்கள் - பல ஆற்றிய நாகர்களிருவர் முன்னே மேவி நின்றருள் புரிந்தான், . அந்த வியப் புறு சரிதையை விரும்புகின்றேன்: கேளிர் முனிவர்களே, . இந்தக் கீர்த்தி கொள் சரிதையைக் கேட்டவர்க்கே, வேள்விகள் கோடி செய்தால் . சதுர் வேதங்க ளாயிர முறை படித்தால்