பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 காணி நிலத்திடையே . ஒர் மாளிகை கட்டித் தரவேண்டும்: - அங்கு கேணியருகினிலே - தென்னைமரம் கீற்று மிள நீரும், I பத்துப் பனிரண்டு - தென்னமரம் பக்கத்திலே வேணும்; - நல்ல முத்துச் சுடர் போலே - நிலாவொளி முன்பு வரவேணும்; - அங்கு கத்துங் குயிலோசை - சற்றேவந்து காதிற்பட வேணும்; என்றன் சித்த மகிழ்ந்திடவே - நன்ருயிளந் தென்றல் வரவேணும். 2 பாட்டுக் கலந்திடவே - அங்கேயொரு பத்தினிப் பெண் வேணும்; - எங்கள் கூட்டுக் களியினிலே - கவிதைகள் கொண்டு தர வேணும்; . அந்தக் காட்டு வெளியினிலே, அம்மா, நின்றன் காவலுற வேணும்; - என்றன் பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட வேணும். 47. ஓம் சக்தி (குறிப்பு : ஒம் சக்தி ஒம் என்ற என்ற மந்திரச் சொல்லாக அமைந்திருக்கின்றது இப்பாடல். ஓம்சக்தி என்று நினைத்தாலே கவிஞருக்கு உற்சாகம் பொங்கி விடுகின்றது. எனது ஈரோடு யாத்திரை’ என்ற கட்டுரை யிலும், ஈரோட்டிற்கு அருகில் உள்ள கருங்கல்பாளையத்