பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 அம்புக்குந் தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும் அச்சமில் லாத படி உம்பர்க்கு மிம்பர்க்கும் வாழ்வுதரும் பதம் ஒம் சக்தி, ஒம் சக்தி, ஓம். 3 பொன்னைப் பொழிந்திடு, மின்னை வளர்த்திடு, போற்றி யுனக் கிசைத்தோம்: அன்னை பராசக்தி யென்றுரைத்தோம்; தளே யத்தனையுங் களைந்தோம்; சொன்ன படிக்கு நடந்திடுவாய், மன மே, தொழில் வேறில்லை, காண்; இன்னுமிதே யுரைப்போம், சக்தி ஓம் சக்தி ஒம் சக்தி, ஒம் சக்தி, ஓம். 4. வெள்ளை மலர்மிசை வேதக் கருப்பொரு ளாக விளங்கிடுவாய்! தெள்ளு கலைத்தமிழ் வாணி, நினக்கொரு விண்ணப்பஞ் செய்திடுவேன், எள்ளத்தனை பொழுதும் பயனின்றி யிரா தென்றன் நாவினிலே வெள்ளமெனப் பொழிவாய், சக்திவேல், சக்தி வேல், சக்திவேல், சக்தி வேல்! 5 48. கேட்பன (குறிப்பு : பாரதியார் எழுதிய இதுவும் புகழ்பெற்ற பாடலாகும். "ஒரு நல்ல வீணை செய்து அதைப் புழுதியில் எறியலாமா? என்னைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய். இந்த மாநிலம் பயன்படும்படி வாழ வல்லமை