பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 அவள் நீடுழிவாழ்க. அவளைப் போற்றுகின்றேன். புகழ் கின்றேன், வாய் ஒயாமல் துாழ்த்துகின்றேன் என்று வாயார வாழ்த்துகின்ருர் பாரதியார்.) "மண்ணிலே வேலி போடலாம். வானத்திலே வேலி போடலாமா?’ என்ருன் ராமகிருஷ்ண முனி. ஜடத்தைக் கட்டலாம். சக்தியைக் கட்டலாமா? உடலைக் கட்டலாம். உயிரைக் கட்டலாமா? என்னிடத்தே சக்தி எனதுயிரிலும் உள்ளத்திலும் நிற்கின்ருள். சக்திக்கு அநந்தமான கோயில்கள் வேண்டும். தொடக்கமும் முடிவுமில்லாத காலத்திலே நிமிஷநீ தோறும் அவளுக்குப் புதிய கோயில்கள் வேண்டும்! இந்த அநந்தமான கோயில்களிலே ஒன்றுக்கு "நான்' என்று பெயர். இதனை ஓயாமல் புதுப்பித்துக் கொண்டிருந்தால் சக்தி இதில் இருப்பாள். இது பழமைப்பட்டுப் போனவுடன், இதை விட்டு விடுவாள். இப்போது அவள் என்னுள்ளே நிறைந்திருக்கின்ருள். இப்போது எனதுயிரிலே வேகமும் நிறைவும் பொருந்தி யிருக்கின்றன. ಣ எனதுடலிலே ககமும் வலிமையும் அமைந் திருக்கின்றன. இப்போது என்னுள்ளத்திலே தெளிவு நிலவிடு கின்றது. இது எனக்குப் போதும்,