பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109 சென்றது கருதமாட்டேன். நாளைச் சேர்வது நினைக்க மாட்டேன். இப்போது என்னுள்ளே சக்தி கொலு வீற்றிருக் கின்ருள். அவள் நீடுழி வாழ்க. அவளைப் போற்றுகின்றேன், புகழ்கின்றேன், வாய் ஓயாமல் வாழ்த்துகின்றேன். "மண்ணிலே வேலி போடலாம். வானத்திலே வேலி போடலாமா?" போடலாம். மண்ணிலும் வானந்தானே நிரம்பி யிருக்கின்றது? மண்ணைக் கட்டினல் அதிலுள்ள வானத்தைக் கட்டின தா காதா? உடலைக் கட்டு. உயிரைக் கட்டலாம். உள்ளத்தைக் கட்டு. சக்தியைக் கட்டலாம். ஆநந்த சக்திக்குக் கட்டுப்படுவதிலே வருத்தமில்லை. என் முன்னே பஞ்சுத் தலையணை கிடக்கிறது. அதற்கு ஒரு வடிவம், ஒரளவு. ஒரு நியமம் ஏற்பட் டிருக்கின்றது. இந்த நியமத்தை அறியாதபடி, சக்தி பின்னே நின்று காத்துக் கொண்டிருக்கிருள். மனித ஜாதி இருக்குமளவும் இதே தலையணை ஆழி வெய்தாதபடி, காக்கலாம். அதனை அடிக்கடி புதுப்பித்துக் கொண்டிருந்தால், அந்த வடிவத்திலே சக்தி நீடித்து நிற்கும். புதுப்பிக்கா விட்டால் அவ் வடிவம் மாறும்.