பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 வியப்புறு தாய்நினக்கே - இங்கு வேள்விசெய் திடுமெங்கள் "ஓம்" என்னும் நயப்படு மதுவுண்டே? - சிவ நாட்டியங் காட்டிநல் லருள் புரிவாய். அன்புறு சோதியென்பர் - சிலர் ஆரிருட் காளியென் றுனைப்புகழ்வார்; இன்பமென் றுரைத்திடுவார் . சிலர் எண்ணருந் துன்பமென் றுனை இசைப்பார்; புன்பலி கொண்டுவந்தோம் - அருள் பூண்டெமைத் தேவர்தங் குலத்திடுவாய் மின்படு சிவசக்தி - எங்கள் வீரைநின் திருவடி சரண் புகுந்தோம். உண்மையில் அமுதாவாய் - புண்கள் ஒழித்திடு வாய்களி உதவிடுவாய்; வண்மைகொள் உயிர்ச்சுடராய் .இங்கு வளர்ந்திடு வாய்என்றும் மாய்வதிலாய்: ஒண்மையும் ஊக்கமுந்தான் - என்றும் ஊறிடுந் திருவருட் சுனையாவாய்; அண்மையில் என்றும் நின்றே - எம்மை ஆதரித் தருள்செய்யும் விரதமுற்ருய். தெளிவுறும் அறிவினை நாம் கொண்டு சேர்த்தனம், நினக்கது சோமரசம், ஒளியுறும் உயிர்ச்செடியில் - இதை ஓங்கிடு மதிவலி தனிற் பிழிந்தோம்; களியுறக் குடித்திடுவாய் - நின்றன் களிநடங் காண்பதற் குளங்கனிந்தோம்: குளிர்சுவைப் பாட்டிசைத்தே - சுரர் குலத்தினிற் சேர்ந்திடல் விரும்புகின்ருேம்.