பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115 அச்சமும் துயரும் என்றே - இரண்டு அசுரர்வந் தெமையிங்கு சூழ்ந்துநின்ருர்: துச்சமிங் கிவர்படைகள் - பல தொல்லைகள் கவலைகள் சாவுகளாம்; இச்சையுற் றிவரடைந்தார் - எங்கள் இன்னமு தைக்கவர்ந் தேகிடவே, பிச்சையிங் கெமக்களித்தாய் - ஒரு பெருநகர் உடலெனும் பெயரினதாம். கோடிமண் டபந்திகழும் - திறற் கோட்டையிங் கிதையவர் பொழுதனைத்தும், நாடிநின் றிடர்புரிவார் . உயிர் நதியினைத் தடுத்தெமை நலித்திடுவார்; சாடுபல் குண்டுகளால் - ஒளி சார்மதிக் கூடங்கள் தகர்த்திடுவார்; பாடிநின் றுனைப்புகழ்வோம் - எங்கள் பகைவரை அழித்தெமைக் காத்திடுவாய். நின்னருள் வேண்டுகின்ருேம் - எங்கள் நீதியுந் தர்மமும் நிலைப்பதற்கே: பொன்னவிர் கோயில்களும் - எங்கள் பொற்புடை மாதரும் மதலேயரும், அன்ன நல் லணிவயல்கள் - எங்கள் ஆடுகள் மாடுகள் குதிரைகளும், இன்னவை காத்திடவே - அன்னை இணைமலர்த் திருவடி துணைபுகுந்தோம், எம்முயி ராசைகளும் - எங்கள் இசைகளும் செயல்களும் துணிவுகளும் செம்மையுற் றிடஅருள்வாய் - நின்றன் சேவடி அடைக்கலம் புகுந்துவிட்டோம்.