பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145 'ஏ சாமி, உனக்கென்ன பயித்தியமா? கந்தைகளைக் கட்டி ஏன் முதுகிலே சுமக்கிருய்?' என்று கேட்டேன். 'நீ நெஞ்சுக்குள்ளே சுமக்கிருய், நான் முதுகின் மேலே சுமக்கிறேன்' என்று சொல்லி ஒடிப்போய்விட்டார். உடனே நான் பொருள் தெரிந்து கொண்டேன். அஞ்ஞானப் பழங் குப்பைகளையும், பழங் கவலைகளையும். பழந் துன்பங்களையும், பழஞ் சிறுமைகளையும் மனதில் வீணுய்ச் சுமந்து திரியும் n மான்ய மனிதனுடைய அறிவீனத்தை விளக்கும் பொருட்டு வெடி சாமியார் இந்த திருஷ்டாந்தத்தைச் சொன்னரென்று தெரிந்து கொண் டேன். பின்னெரு நாள், அவரிடம் பரிகாசமாக நான்,'சாமி, இப்படிப் பிச்சை வாங்கித் தண்டச் சோறு தின்றுகொண்டு ஜீவனம் பண்ணுகிருயே, ஏதேனும் தொழில் செய்து பிழைக்கக் கூடாதா?’ என்று கேட்டேன். அந்தப் பரதேசி சொல்லுகிருர் : 'தம்பி, நானும் தொழில் செய்து தான் பிழைக் கிறேன். எனக்கு வண்ணன் வேலை. ஐம்புலன்களாகிய கழுதைகளை மேய்க்கிறேன். அந்தக்கரணமான துணி மூட்டைகளை வெளுக்கிறேன்' என்ருர். ஆம், பரிசுத்தப் படுத்துகிறவனே ஆசார்யன். அவனுடைய சொல்லே மற்றவர் ஆசரிக்க வேண்டும். மேலே சாமியாருடைய புறநடைகள் குடும்பம் நடத்தும் கிருஹஸ்தர்களுக்குத் தகுதியல்ல. ஆனல் அவருடைய உள்ள நடையை உலகத்தார் பின்பற்ற வேண்டும். ஐம்புலன்களாகிய கழுதைகளை மீறிச் செல்லாதபடி கட்டுப் படுத்தி ஆள வேண்டும். உள்ளத்தை மாசில்லாதபடி சுத்த மாகச் செய்துகொள்ளவேண்டும். 10 س-۰ به drr۰ا