பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147 உண்மை கூறினல் தீங்கு நேரிடுமென்று நினைப்போர் தெய்வம் உண்மை யென்பதை அறியமாட்டார்கள். தெய்வம் உண்மை. அதன் இஷ்டப்படி உலகம் நடக் கிறது. ஆதலால் பயப்படுகிறவன் மூடசிகாமணி. அந்தக் கரணத்தை வெளுத்தலாவது அதிலுள்ள பயத்தை நீக்குதல். அந்தக்கரணத்தை சுத்தி செய்து விட்டால் விடுதலை யுண்டாகும்' என்ருர். பின்னு மொரு ஸ்மயம், மேற்படி குள்ளச்சாமி என்னிடம் வந்து, 'தம்பி, நீ இலக்கணக்காரனச்சுதே! "வண்ணுன்’ என்ற வார்த்தையை உடைத்துப் பொருள் சொல்லுவாயா?" என்று கேட்டார். நான் நகைத்து 'சாமி, உடைக்கிற இலக்கணம் எனக்குத் தெரியாது’ என்றேன். அப்போது குள்ளச்சாமி சொல்லுகிருர் :- 'வண்ஆன் : வண்ணுன். ஆன் என்பது ரிஷபம். வள்ளலாகிய ரிஷபம் நந்திகேசுரர். அவருடைய தொழில் சுத்தஞான மூர்த்தியாகிய சிவனைச் சுமந்து கொண்டிருத்தல். தமிழ் நாட்டு ஞானசார்யர்களுக்கு ஆதிமூர்த்தியும் வள்ளலுமாகி நிற்கும் இந்த நந்தி பகவானுடைய தொழிலாகிய ஆசார்யத் தொழிலையே நான் வண்ணுன் தொழிலென்று சொல்லுகிறேன். எனக்கு வண்ணன் தொழில்' என்று மேற்படி குள்ளச்சாமி சொன்னர். 4. ஜீவன் முக்தி அதுவே சிதம்பரம் குறிப்பு : குள்ளச்சாமி என்ற ஜடபரதரைப் பற்றி பாரதியார் பல கட்டுரைகள் எழுதியிருக் கின்ருர். பாரதி ஆறுபத்தாறு என்ற கவிதை