பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

149 அடிபோல் தோன்றிய குள்ளச்சாமி ஏழேமுக்கால் அடி உயரம் வளர்ந்துவிட்டார். ஒரு கண்ணேப் பார்த்தால் சூரியனைப்போல் இருந்தது; மற்ருெரு கண்ணைப் பார்த் தால் சந்திரனைப்போல் இருந்தது. முகத்தின் வலப்புறம் பார்த்தால் பார்வதியைப் போல் இருந்தது. இடப்புறம் பார்த்தால் சிவன்போல் இருந்தது. குனிந்தால் பிள்ளையார் போலிருந்தது. நிமிர்ந்து பார்க்கும் போது விஷ்ணுவின் முகத்தைப் போலே தோன்றிற்று." நானே பரமபுருஷன் என்று சாமியார் சொன்னர்: மதபேதங்களை நீக்கி ஒருமையைக் காணென்ருர். வேணு. தலி மூர்ச்சையாகி விட்டார்; பாரதியும் மூர்ச்சையாகி விட்டார். மூர்ச்சை தெளிந்தபோது சாமியார் போய் விட்டார்! இந்த குள்ளச்சாமியார் பாரதியாரின் உள்ளங் கவர்ந்தவர்களில் ஒருவராவர். மேலும் பாரதி அறுபத்தாறில் குறிக்கப்பட்டுள்ள கோவிந்தசுவாமி முதலிய சில சாமியார்கள் இவரைக் கவர்ந்தவர்கள். இவர்களால் அபின் சாப்பிடும் பழக்கமும் மீண்டும் ஏற்பட்டது. இளம் பருவத்தே இவர் எட்டயபுரம் மன்னரால் தூண்டப்பெற்று. பூரணுதி லேகியம் சாப்பிட்ட வரல்லவா? அந்த வழக்கம் திரும்பவும் பற்றிக் கொண்டது. தமது வறுமைப் பிணியைப் பாரதி யார் இவ்வாறு மறக்க முயன்ருர் என்றும் கூறலாம். இதுவே பாரதியாரின் அகாலமரணத் திற்குக் காரணமாய் முடிந்தது.)