பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I50 குள்ளச்சாமி யாரென்பதை நான் முன்னெருமுறை சுதேசமித்திரன் பத்திரிகையில் எழுதிய 'வண்னன் கதை" யில் சொல்லியிருக்கிறேன். இவர் ஒரு பரமஹம்ஸர். ஜட பரதரைப்போல், யாதொரு தொழிலும் இல்லாமல், முழங் காலுக்குமேல் அழுக்குத்துணி கட்டிக்கொண்டு, போட்ட இடத்தில் சோறு தின்றுகொண்டு, வெயில் மழை பாராமல் தெருவிலே சுற்றிக்கொண்டிருக்கிருர். இவருடைய ஒழுக்க விநோதங்களை மேற்படி வண்ணுன் கதையிலே* காண்க. இவர் வந்து சோறு போடு என்று கேட்டார். தாம் திருவமுது செய்யுமுன்பாக, ஒரு பிடி அன்னம் என் கையில் நைவேத்தியமாகக் கொடுத்தார். நான் அதை வாங்கி யுண்டேன். அப்பொழுது சாமியார் போஜனம் முடித்த பிறகு, என்னுடன் மேல் மெத்தைக்கு வந்தார். கண்ணை மூடிக்கொள் என்ருர். கண்ணை மூடிக் கொண்டேன். நெற்றியில் விபூதியிட்டார். விழித்துப் பார் என்ருர், கண்ணை விழித்தேன். நேர்த்தியான தென்றல் காற்று வீசுகிறது. சூரியனுடைய ஒளி தேனைப் போல்ே மாட மெங்கும் பாய்கின்றது. பலகணி வழியாக இரண்டு சிட்டுக் குருவிகள் வந்து கண் முன்னே பறந்து விளையாடுகின்றன. குள்ளச்சாமியார் சிரிக்கிருர். கடைக் கண்ணுல் தளத்தைக் காட்டினர். கீழே குனிந்து பார்த்தேன். ஒரு சிறிய ஒலைத் துண்டு கிடந்தது. அதை நான் எடுக்கப் போனேன். அதற் குள்ளே அந்தக் குள்ளச்சாமி சிரித்துக்கொண்டு வெளியே ஒடிப்போனர். அவரைத் திரும்பவும் கூப்பிட்டால் பயனில்லை என்பது எனக்குத் தெரியும். அவர் இஷ்டமான போது வருவார்; இஷ்டமானபோது ஒடிப் போவார். சிறு குழந்தை போன்றவர். மனுஷ்ய விதிகளுக்குக் கட்டுப் பட்டவரில்லை. ஆகவே நான் அவரைக் கூப்பிடாமலே கீழே கிடந்த ஒலையை எடுத்து வாசித்துப் பார்த்தேன். “பாரதி அறுபத்தாறு 30, 31 பாடல்களையும் காண்க.