பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

151 '1. எப்போதும் வானத்திலே சுற்றும் பருந்துபோல், போக விஷயங்களினல் கட்டுப்படாமல், பரமாத்மாவின் ஞானக் கதிரை விழித்து நோக்குதலே விடுதலை. அதுதான் சிதம்பரம். மகனே! சிதம்பரத்துக்குப் போ. 2. சிதம் பரத்தில் நடராஜருடன் சிவகாம சக்தி பக்தருக்கு வர தானம் கொடுக்கிரு.ர். போய் வரம் வாங்கு. 3. சிதம் பரமே பூரீ ரங்கம்; அதுவே பழனிமலை. எல்லாப்புண்ணிய rேத்திரங்களும் ஜீவன் முக்திச் சின்னங்கள் என்று தெரிந்துகொள். உனக்கு க்ஷேமமும் நீண்ட வயதும் ஜீவன் முக்தியும் விளைக' என்று எழுதியிருந்தது. இந்த வசனங் கள் நமது புராதன வேத தர்மத்திற்கு முற்றும் ஒத்திருக்கிற படியால், அவற்றைச் சுதேசமித்திரன் பத்திரிகை மூலமாக வெளியிடலானேன். 5. கடற்கரையாண்டி (குறிப்பு : இந்தச் சுவையான காதையிலே கந்தர் அலங்காரத்தில் ஒர் அழகிய பாடலைப் ப ற் றி ச் சொல்லுகின்ருர். அருணகிரிநாதர் எங்ங்ணம் தமக்கு விதி அழிந்துபோயிற்று என்று இந்தப் பாடலில் விளக்கி இருக்கின்ருர், அந்தப் பாடலை நாடராகத்தில் பாடும்போது எவ்வாறு தமக்கு மெய்சிலிக்கும்படியான அனுபவம் ஏற்பட்டது என்று விவரிக்கிரு.ர். முருகனிடத்தில் ஈடுபாடு கொண்டவர் என்பதையும் சொல்லாமல் சொல்லுகிரு.ர்.) ஒரு நாள், நடுப்பகல் நேரத்திலே, நான் வேத புராத்தில் கடற்கரை மணலின்மேல் அலைக்கு"எதிரே போய்