பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

157 கொடுத்தான்.அதென்ன காயித மென்ருல், 'அன்று மாலை கோயிலில் நடக்கப் போகிற பெரிய பாளையம் மடாதி பதியின் உபந்யாசத்துக்கு எல்லாரும் வந்து "சிறப்பிக்க வேண்டும்" என்ற அழைப்புக் காயிதம். அந்தக் காயிதத்தின் மகுடத்தில் ஒரு விருத்தம் எழுதி யிருந்தது. அவ்விருத்தத்தின் பின்னிரண்டடிகள் பின் வருமாறு : "தோகை மேல் உலவும் கந்தன் சுடர்க் கரத்திருக்கும் வெற்றி வாகையே சுமக்கும் வேலை வணங்குவ தெமக்கு வேலை." (மயிலின் மேலே உலவுகின்ற கந்தனுடைய கையில் வெற்றிமாலை சூடி நிற்கும் வேலாயுதத்தை வணங்குவதே நம்முடைய தொழில்.) இவ்விரண்டு பாதங்களையும் படித்துப் பார்த்துவிட்டு, பிரம்மராய ஐயர், 'நல்ல பாட்டு' என்ருர். வீரப்ப முதலியார் பின் வருமாறு ப்ரஸங்கம் செய்யலானர் : "கேளும் காளி தாஸ்ரே, பிரம்மராய ஐயரே, நீரும் கேளும். தெய்வத்தைப் போற்றுவதே நம்முடைய வேலை யென்றும், அதைத்தவிர நமக்கு வேறு எவ்விதமான தொழிலும் கிடையாதென்றும் சொல்லிக் கொண்டிருப் போர், சோம்பரில் முழுகிப் போய்த் தம்முடைய வாளுளையும் வீணாகச் செய்து பிறரையும் கெடுக்கிருர்கள். செய்கை பிரதானம். செய்கையை விடுதல் பாவம். கடவுள் நமக்கு ஐம்புலன்களையும், அறிவையும் கொடுத்து எப்போதும் உழைப்பினலேயே தனக்கும் பிறர்க்கும் நன்மை தேடும்படி ஏற்பாடு செய்திருக்கிரு.ர். அதற்கு மாருகச் செய்கையற்றுச் கம்மா இருப்பதை இன்பமென்று