பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 நம்மாழ்வார் :-'திடவிசும்பு, எரி, வளி, நீர், நிலம் இவை மிசைப்படர் பொருள் ழுழுவதும் ஆய், அவை யவைதோறும் உடல்மிசை உயிரெனக் கரந்துளன்." ஹெர்மெஸ் :-"தெய்வம் எது? ஜகத்தின் உயிர்.” முடிவுரை எனவே, எல்லா மதங்களும் உண்மைதான் . ஒரு மதமும் முழு உண்மையன்று. ஆதலால் மதப்பிரிவுகளைக் கருதி மனிதர் பிரிந்துவிடக் கூடாது. எல்லா மதஸ்தரும் ஒரே தெய்வத்தைத்தான் வணங்குகிருர்கள். லெளகிக விஷயங்களைப் போலவே மதவிஷயங்களிலும் ஒப்பு. உடன் பிறப்பு, விடுதலை மூன்றும் பாராட்ட வேண்டும். 8. நம்பிக்கை (குறிப்பு : நம்பிக்கையின் வலிமை அளவிட முடியாதது. நம்பிக்கையே காமதேனு என்கிருர் பாரதியார், பாரதியார் இந்த நம்பிக்கையில் பெரிதும் நம்பிக்கை வைத்திருக்கிருர். நம்பிஞேர் கெடுவதில்லை; நான்கு மறைத் தீர்ப்பு என்றும் அவர் சொல்வதை இங்கு கவனிக்க வேண்டும்.) மயிலாப்பூரில் பூரீ. கலவல கண்ணன் செட்டியார் ஏற்படுத்திய புதிய ஸம்ஸ்க்ருத கலாசாலையின் க்ருஹப் பிரவேசத்தை ஒட்டி, நீதிப்ரவீண பூரீ. சுப்பிரமணிய அய்யர் செய்த ஆசி வசனங்களிடையே, ராமானுஜாசார்யருடைய மகிமையைப்பற்றி சில வார்த்தைகள் சொன்னர். பூரீமான் நீதி மணி அய்யர் பிரம்ம வேதாந்தியாகையால் இவருக்குத் துவைதம், விசிஷ்டாத்துவைதம், அத்வைதம் என்ற