பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 தொழில் செய்துகொண்டிரு. பயனுக்கு அவசரப்படாதே. தெய்வம் நிச்சயமாக வரம் கொடுக்கும். தெய்வம் பிரஹ் லாதனை ஹிரண்யனிடமிருந்து காத்தது. முதலை வாயிலி லிருந்து யானையை விடுவித்தது. பாஞ்சாலியின் மானத் தைக் காத்தது. தெய்வம் வித்திரமாதித்யனுக்கும், காளி தாஸனுக்கும், சிவாஜி ராஜாவுக்கும், நிகரில்லாத வெற்றியும் தீராத புகழும் கொடுத்தது. இவ்விதமான தெய்வபக்தியை ராமாநுஜர் மனிதருடைய இஹபர வாழ்வுக்கு முதல் ஸ்தானமாகச் சொன்னர். ஆழ்வார் களுடைய பாட்டில் விடுதலையொளி நிற்பதுகண்டு, அவற்றை வேதம் போல் கருதவேண்டுமென்று போதனை செய்தார். ஆழ்வார்களுடைய குலம் நானவிதம்; அப்படியிருந்தும் அவர்களைக் கோயிலில் வைத்துப் பூஜை செய்யலாமென்று ராமாநுஜர் நியமித்தார். முற்காலத்தில் பிராமணர் இதர ஜாதியாரை இழிவாகவைத்துக் கெடுத்தார்களென்றும், ஞானத்துக்குத் தகாதவரென்று சொல்லி அடிமைப்படுத்தி ர்ைகளென்றும் பொய்க்கதைகள் சொல்லி, ஹிந்து தர்மத்தை அழிக்க விரும்புகிற கிருஸ்துவப் பாதிரிகளும், அவவிடத்து சிஷ்யர்களும் ராமாநுஜாசாரியர் பிராமணர் என்பதை அறிய மாட்டார் போலும். சூத்திரராகிய திருக்கச்சி நம்பியை ராமாநுஜர் குருவாகக்கொண்டு அவருடைய உச்சிஷ்டத்தை உண்ணத் திருவுளங் கொண்டார். திருநாராயணபுரத்தில், பறையர் ஒருசமயம் கோயிலுக்குள் வரலாமென்று ரீ ராமாநுஜர் நியமித் தருளிய முறை இன்றைக்கும் நடந்துவருகிறது. இப்படிப்பட்ட மனுஷ்யர்களுடைய தர்மத்தை இக் காலத்தில் வளரும்படி செய்யவேண்டுமென்ற நோக்கத் துடன் ரீ. கண்ணன் செட்டியார் ஏற்படுத்தியிருக்கும்