பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 இங்ங்ணம் ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், லக்ஷம், கோடி யாக, மனித ஜாதியில் ஸத்யயுகம் பரவுதலடையும் காலம் ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டது. இதில் ஸ்ந்தேஹம் இல்லை. 10. வேத ரிஷிகளின் கவிதை (முடிவுரை) (குறிப்பு : வேதகாலத்தில் கோவில் கிடை யாது; கோவிலும் மடமும் பெளத்தமதப் பழக் கத்தால் ஏற்பட்டதென்றும் கட்சி பேதங்கள் இல்லையென்றும் நன்முகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிருர் பாராதியார். புதுச்சேரியில் புயற்காற்று அடித்தபோது உலகமே அழிந்து போகும்படியாக பூமி நடுங்கிற்ரும். ஆல்ை, பாரதியார் இதைப்பற்றிக் கவலைப்படவேயில்லை. இந்த சம்பவத்தை நினைட்வுடுவது இக்கட்டுரை.) வேத ரிஷிகள் காலத்தில் கோவில் கிடையாது; விக்ர ஹாராதனை கிடையாது; ஸந்யாஸம் கிடையாது. அத்வைத த்வைத விசிஷ்டாத்வைதப் பிரிவுகள் கிடையா; பக்தி மாத்திரந் தானுண்டு. கோவிலும் மடமும் பெளத்தமதப் பழக்கத்தால் வெளி நாடுகளிலிருந்து நமக்குக் கிடைத்த பேறுகளென்று சரித்திரக்காரர் சொல்லுகிருர்கள். ஆனால், இப்போது ஹிந்துமதப் பயிற்சிகளுள்ளே கோவிலும் சிலையும் நெடுந் தூரம் ஆழ்ந்து போய்விட்டன. ஆதலால், இப்போது ஹிந்து மதத்திலிருந்து கோவிலைப் பிரிக்க முடியாது. கோவில்களுக்குள்ளே பரஸ்பரம் பொருமையும், சண்டையு மில்லாதபடி எல்லாக் கோவில்களும் ஸாகrாத் ஸஅரி யனுகவும், அக்தி குமாரனாகவும், ருத்ரனகவும், இந்த்ர