பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 நமது நாட்டில் இங்கிலீஷ் பள்ளிக்கூடங்களில் தேறிவரும் மனிதரைப்போல் இத்தனை சிறந்த த்ருஷ்டாந்தம் வேறெங்கும் கிடைப்பது மிகவும் துர்லபமென்று தோன்று கிறது 'கனவினும் இன்னுது மன்னே வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு' என்று திருவள்ளுவர் பாடியிருக்கிரு.ர். இதன் பொருள். வாய்ப்பேச்சு ஒரு மாதிரியாகவும் செய்கை வேருெரு மாதிரியாகவும் உடையோரின் உறவு கனவிலும் கொள்ளுதல் தீது. என்பதேயாம். பீ. ஏ.. எம். ஏ. பரீrைகள் தேறி, வக்கீல்களாகவும், உபாத்தி யாயராகவும், என்ஜினிர்களாகவும், பிற உத்தியோகஸ்த ராகவும் வாழும் கணக்கில்லாத ஐயர், ஐயங்கார், பிள்ளை முதலியவர்களில் எவராவது ஒருவர் தம் வீட்டுக் கல்யா ணத்துக்கு லக்னம் பார்க்கவேண்டிய அவசியமில்லை என்று நிறுத்தியிருப்பாரா? "பெண் பிள்ளைகளின் உபத்திரவத் தால் இவ்விதமான மூட பக்திகளுக்குக் கட்டுப்பட்டு வாழும்படி நேரிடுகிறது” என்று சிலர் முறையிடுகிரு.ர்கள். பெண் பிள்ளைகளுக்கு மரியாதை கொடுக்க வேண்டிய இடத்தில் கொடுக்கவேண்டும். மூடத்தனமான, புத்தி மான்கள் கண்டு நகைக்கும்படியான செய்கைகள் செய்ய வேண்டுமென்று ஸ்திரீகள் பலனின்றிப் பிதற்றுமிடத்தே, அவர்களுடைய சொற்படி நடப்பது முற்றிலுந் தவறு, மேலும் அது உண்மையான காரணமன்று. போலிக் காரணம். நம்மவர் இத்தகைய ஸாதாரண மூடபக்திகளை விட்டு விலகத் துணியாமலிருப்பதன் உண்மையான காரணம் வைதிகரும் பாமரரும் எம்மை ஒருவேளை பந்தி போஜனத்துக்கு அழைக்காமல் விலக்கி விடுவார்கள்' என்பதுதான். இங்கிலீஷ் படித்த மேற்குலத்து ஹிந்துக்கள்