பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 சொல்லினர்' என்று வேதமே சொல்லுகிறது என்பதையும் மறந்துவிடக் கூடாது என்றும் எச்சரிக்கிரு.ர். பிற்காலத்தில்தான் விஷ்ணு உயர்வு என்றும் சிவன் உயர்வு என்றும் பொய்ப் புராணங்கள் தோன்றின என்றும் பாரதியார் கூறுகின்ருர். 'நாராயணன் பரிபாலன மூர்த்தி. பரப் ரஹமம் அவரே. சிவன் ஸம்ஹாரமூர்த்தி, பரப் ரஹ்மம் அவரே. பிரம்மா சிருஷ்டிமூர்த்தி: அவரே ஸாகrாத் பரப்ரஹ்மம். அவருடைய பெயரைத்தான் ப்ரஹ்மத்திற்கு வைத்திருக் கிறது. இதுவே உண்மையாகும்." என்று பாரதியார் தீர்மானமாகக் கூறுகின்ருர்.) ஆத்மா உணர்வு; சக்தி செய்கை. உலகம் முழுதும் செய்கைமயமாக நிற்கிறது. விரும் புதல், அறிதல், நடத்துதல் என்ற மூவகையான சக்தி இவ்வுலகத்தை ஆளுகின்றது. இதைப் பூர்வ சாஸ்திரங்கள் இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி என்று சொல்லும். ஆறு மதங்கள் ஆதிசங்கராசார்யார் பெளத்த மதத்தை எதிர்த்த போது, தமக்குச் சார்பாக வேதத்தை ஒப்புக்கொள்ளும் எல்லா வகுப்புக்களையும் ஒன்ருக்கிக்கொண்டனர். அக் காலத்தில் பெளத்தம், ஜைனம் என்ற வேத விரோதமான மதங்களில் சேராமல் வேதத்தை ஆதாரமாகக் கொண் டோர் ஆறு மதங்களாகப் பிரிந்து நின்றனர். இந்த ஆறு மதங்களில் எதையும் கண்டனம் செய் யாமல், சங்கராசார்யார் இவ்வாறும் வெவ்வேறு வகை