பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

201 தைக் கொடுப்பான். இது அமிர்த பானம். துதான் நான்கு வேதங்களின் தீர்ப்பு. இந்தக் கடவுளை முழுமையாக நோக். மிடத்தே, வேதம் அவனுக்கு 'தத்' (அஃது) அதாவது பரப்ரஹ்மம் என்ற பெயரும், ஸத்’ (உண்மைப் பொருள்) முதலிய பெயர்களும் கொடுக்கிறது. படைத்தல், காத்தல், மாற்றுதல், அருள் செய்தல், வலிமையுடைமை, தெளிவுடைமை, ஒளியுடைமை, எங்கும் பரந்திருக்குந் தன்மை, பலபடத் தோன்றுந் தன்மை, ஆனந்த இயல்பு முதலிய கடவுளின் எண்ணிறந்த குணங்களையும் இயல்புகளையும் பிரிவுபடுத்தி நோக்கு மிடத்தே, வேதம் அந்தந்தக் ருணங்களுக்கும் இயல்பு களுக்கும் தக்கபடி, அவன் ஒருவனுக்கே பிரமன், விஷ்ணு, சிவன், இந்திரன், வாயு, ஸோமன், ஸூர்யன், வருணன், அக்தி,பகவான் முதலிய பலவேறு நாமங்களை வழங்குகிறது. இந்த விஷயத்தை ரிக் வேதம் 'ஏகம் ஸத்’ என்று தொடக்கமுடைய மந்திரத்தில் மிகவும் தெளிவாக விளக்கிக் காட்டுகிறது. எனவே, வேதத்தின் வழிநூல்களாகிய புராணங் களில், இக்கடவுளை உணர்வதற்கு ஸாதனங்களாகிய தவம், பக்தி, யோகம் முதலியனவற்றை அனுஷ்டிக்கும் நெறி களும், இந்த வழியே செல்ல விரும்புவோனுக்கு இன்றி யமையாதனவாகிய திடசித்தம், நேர்மை, ஜீவகாருண்யம் முதலிய குணங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ளும் நெறி களும், இந்தக் குணங்கள் ஏற்படாதபடி தடுக்கும் பயம், கர்வம், கோபம், நிஷ்டுரம் முதலிய அசுர குணங்களே அறுக்கும் நெறிகளும், பல திருஷ்டாந்தங்களாலும் சரித்திரங்களாலும், உவமைக்கதைகளாலும் உபதேசங் களாலும் விஸ்தாரமாகக் காட்டப்பட்டிருக்கின்றன.