பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

303 மூர்த்திகளை இழிவுபடுத்திப் பேசலாயினர். இந்திரன், அக்கினி, வாயு, வருணன் என்ற மூர்த்திகளே வேதத்தில் முக்கியமானவை. பின்னிட்டு இந்த மூர்த்திகளைத் தாழ்ந்த தேவதைகளாக மதிக்கத் தொடங்கிவிட்டார்கள். காலக் கிரமத்தில் வைஷ்ணவம், சைவம், சாக்தம் முதலிய சில மதங்களே நாட்டில் மிஞ்சி நின்றன. எனவே, வேதத்தில் முக்கிய மூர்த்திகளாகிய வாயு, வருணன், சூரியன், இந்திரன் முதலியவர்களைப் பிற்காலத்துப் புராணங்கள் துாஷணை செய்யத் தொடங்கிவிட்டன. முற்பகல் செய்தது பிற்பகல் விளையும். பின்னிட்டுச் சைவ வைஷ்ணவ புராணங்களில் அவ்வக்காலத்து ராஜாக்கள் ஜனங்களின் கோட்பாடுபாடுகளே உயர்த்தும் பொருட்டாக மேற்படி கட்சி பேதங்கள் பஹிரங்க விரோதங்களாக முடிந்து, சைவ புராணங்களில் விஷ்ணு தூஷணைகளும் வைஷ்ணவ புராணங்களில் சிவதுாஷணைகளும் ஏராளமாகச் சேர்க்கப்பட்டன. அதற்கிசையவே புதிய கதைகளும் கற்பிக்கப்பட்டன. எனவே, இந்நூல்கள் பெரும்பாலும் நம்முடைய தெய்வத்தன்மையையும் வைதிக மாண்பையும் இழந்து போய், வெட்கமற்ற அவைதீக துரஷணைகள் நிரம்பிக் கசுதிச் சண்டைகளை மிகுதியாகச் சேர்த்து ஜனங்களுக் குள்ளே பகைமைத் தீயை மூட்டிவிடலாயின. இங்ங்னம் பரம சத்தியமாகிய ஹிந்து மதம் சிதைவுப் பெற்றுப் போயிற்று, ஹிந்து ஜாதியார் வீழ்ச்சியடைந்தனர். வேதம் ஒளி மறைந்து, பிற்காலத்தில் வேதத்துக்கு நாம் மாத்திரையாகக் கொடுக்கப்பட்ட உயர்வைக்கூட இந்தக் கசுதிக்காரர் சிலர் மறுக்கலாயினர். திருஷ்டாந்தமாகப் பிற்காலத்ச்ை சைவர்களிலே சிலர் வேதங்களைக் காட்டிலும் சிவாகமங்களே மேலென்று சொல்லத் தலைப்பட்டார்கள், இங்ங்ணம் ஏற்பட்ட புராணச் சண்டைகளுக்கு வேதமே