பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蠢互0 மக்கா நகரத்தில், பூஜாரிகளின் ஸ்பை கூடியிருக்கிறது. பிரம்மாண்டமான ஸ்பை. நாட்டிலுள்ள பூஜாரிகள் அத்தனை பேரும் சேர்ந்து கூடும் வருஷாந்தக் கூட்டம் திருவிழாக் காலத்தை ஒட்டி நடந்தது. முஹம்மது நபி பூஜாரிகளின் வம்சத்தில் பிறந்தவர். அரபி தேசத்து ஜனங் கள் அந்தக் காலத்தில் விக்கிர ஹாராதனையிலும் பல தேவ உபாஸ்னேயிலும், தற்காலத்தில் தணிந்த ஜாதி ஹிந்துக்கள் எத்தனை மூழ்கிக் கிடக்கிருர்களோ, அத்தனை மூழ்கிக் கிடந்தார்கள். அவர்களிடையே முஹம்மது நபியின் குடும்பத்தார்கள், கோவிற் குருக்களையும் பட்டர்களையும் ஒத்திருந்தனர். இவர்களுடைய வைதிக கோஷ்டியின் ஸ்பைக்கு நடுவே முஹம்மது நபி எழுந்து நின்று சொல்லு கிருர்:-"நான் அல்லாவை நேரே பார்த்திருக்கிறேன். அவர் என்னைத் தமது முக்கிய பக்தராகவும், பிரதிநிதியாக வும் நியமனம் செய்திருக்கிருர், நீங்கள் இனிமேல் அவரைத் தொழுங்கள். அவரை மாத்திரம் தொழுதால் போதும். கடவுள் ஒருவர்தான் இருக்கிருர். பல ஈசுவரர் இல்லை. ஈசனைத் தவிர ஈசன் வேறில்லை. லா இலாஹா இல் அல்லா. அல்லாவைத் தவிர வேறு அல்லா கிடையாது. (அரபி பாஷையில் அல்லா என்ற பதத்திற்குக் கடவுள் என்று அர்த்தம்.) அவர் நம்மைப்போல் தோலுடம்பும் கை கால் முதலிய உறுப்புக்களும் உடையவரல்லர். அவரைச் சிலைகள் வைத்துத் தொழுவதிலும் அவருக்கு உங்களுடைய ஆகாரங்களை நைவேத்தியம் பண்ணுவதிலும் பயனில்லை. அவர் எல்லாவற்றையும் படைத்து, எல்லாவற்றையும் இயக்கிக் காத்து, எல்லாவற்றையும் வடிவு மாற்றிக் கொண்டிருக்கிருர். அவர் எல்லாவற்றையும் தம்முடைய உடம்புகளாகவும் தம்முடைய ரூபங்களாகவும் உடையவர். அறிவு வடிவமாக நிற்பவர். அருள் வடிவமாக நிற்பவர். அவரை மனமாகிய கோயிலில் நிறுத்தி, வீரியம் பக்தி