பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

215 வனத்தில், நள்ளிரவிலே, தனி மணல் வெளியிலே, ஒட்டகையின்மீது தனியாக ஏறிக்கொண்டு போகிரு.ர். அல்லது, அங்கொரு குன்றின்மேல் ஏறி நிற்கிரு.ர். கேள்வியாலும், நெடுங்காலத்து பக்தியாலும், நிகரற்ற அன்பிலுைம், ஞானத்தாலும் பக்குவப்பட்ட இவருடைய ஹ்ருதயம் அப்படிப்பட்ட இடத்தில் அல்லாவை நாடு கிறது. வேறு நினைப்புக்கு இடமில்லை. அப்போது அங்கு ஞானவொளி வீசிற்று. நபி அல்லாவைக் கண்டார். சுகப் பிரம்ம ரிஷிக்கு நேர்ந்த அனுபவம் முஹம்மது நபிக்கு எய்திற்று. அங்கமே நின் வடிவமான சுகர் கூப்பிட நீ எங்கும் ஏன் ஏன் என்ற தென்னே, பராபரமே என்று தாயுமானவர் பாடியிருக்கிருf. இந்தக் கதை எப்படியென்ருல், சுகப் பிரம்ம ரிஷி காட்டு வழியாகப் போய்க் கொண்டிருக்கையில், கடவுளைப் பார்க்க வேண்டுமென்ற தாகமேலீட்டால், "கடவுளே கடவுளே' என்று கதறிக்கொண்டு போளுராம். அப்போது காட்டிலிருந்த கல், மண், மணல், நீர், புல், செடி, மரம், இலை, பூ, காய், காற்று, ஜந்துக்கள் எல்லா வற்றினின்றும், 'ஏன், ஏன்' என்ற மறுமொழி உண்டா யிற்று. அதாவது, கடவுள் ஞான மயமாய் எல்லாப் பொருள்களிலும் நிரம்பிக் கிடப்பதைச் சுக முனிவர் கண்டார் என்பது இக்கதையின் பொருள். முஹம்மது நபி மஹா ஸாந்தர புருஷர், மஹா சூரர், மஹா ஞானி, மஹா பண்டிதர், மஹா பக்தர், மஹா லெளகீக தந்திரி. வியாபாரமானலும் யுத்தமானலும் முஹம்மது நபி கவனித்தால், அந்த விஷயத்தில் வெற்றி மிகவும் உறுதி, ஆதலால் அவர் மிகவும் அபிமானிக்கப் பட்டார்,