பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. விநாயகர் வணக்கம் பிற்காலத்திலே தோன்றியது என்ருலும், ஒம் என்னும் பிரணவப் பொருளாக அது மலர்ச்சியடைந்திருக்கிறது. விநாயகர் இல்லாத இடமே யில்லை என்றுகூடச் சொல்லலாம். விநாயகர் வழி பாட்டுக்கு மிக எளிதானவர். மஞ்சளைப் பிடித்து விநாயகர் செய்து விடலாம். அறுகம்புல்லையும் எருக்கம்பூ மாலையை யும் அணிந்தால் போதும். விநாயகரைப் பற்றிப் பலபல கதைகள் உண்டு. ஆடம்பரமாகப் போருக்குப் புறப்பட்டபோது, சிவ பெருமான் விநாயகரைப் போற்றி வணங்காமற் போன தால், அவர் ஏறிய தேர் அச்சுமுறிந்து விழுகின்றது என்பது கதை. இதனால் விநாயகரை முதலில் தொழ வேண்டும் என்ற உண்மையைப் புலப்படுத்துகின்ருர், விநாயகர் நான்மணி மாலையில் இரண்டு அகவல்களையும் ஒரு வெண்பாவையும் கீழே தருகின்றேன். பாரதியார் இதில்தான், 'நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்குழைத்தல் இமைப்பொழுதுஞ் சோராதிருத்தல்' என்று, தமது தொழில் பற்றி விளக்கும் புகழ்பெற்ற வரிகள் வருகின்றன. பாரதியார் தமக்குத்தாமே வகுத்துக் கொண்ட தொழில் கவிதை என்று தெளிவாகக் கூறுகின்ருர்.) கற்பக விநாயகக் கடவுளே, போற்றி! சிற்பர மோனத் தேவன் வாழ்க! வாரண முகத்தான் மலர்த்தாள் வெல்க! ஆரண முகத்தான் அருட்பதம் வெல்க! படைப்புக் கிறையவன்; பண்ணவர் நாயகன், இந்திர:குரு, எனது இதயத் தொளிர்வான்