பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 சந்திர மவுலித் தலைவன் மைந்தன் கணபதி தாளைக் கருத்திடை வைப்போம்; குணமதிற் பலவாம்; கூறக் கேளிர்! உட்செவி திறக்கும்; அகக்கண் ஒளிதரும்: அக்கினி தோன்றும் ஆண்மை வலியுறும்; திக்கெலாம் வென்று ஜயக்கொடி நாட்டலாம்; கட்செவி தன்னைக் கையிலே எடுக்கலாம்; விடத்தையும் நோவையும் வெம்பகை யதனையும் துச்சமென் றெண்ணித் துயரிலா திங்கு நிச்சலும் வாழ்ந்து நிலைபெற் ருேங்கலாம்; அச்சந் தீரும், அமுதம் விளையும்: வித்தை வளரும்; வேள்வி ஒங்கும்; அமரத் தன்மை எய்தவும் இங்குநாம் பெறலாம்; இஃதுணர் வீரே! கடமை யாவன; தன்னைக் கட்டுதல் பிறர்துயர் தீர்த்தல், பிறர் நலம் வேண்டுதல், விநாயக தேவனுய், வேலுடைக் குமரனய் நாரா யணனய், நதிச்சடை முடியனுப் பிறநாட் டிருப்போர் பெயர்பல கூறி, அல்லா! யெஹோவா! எனத்தொழு தன்புறும் தேவருந் தாய்ை, திருமகள் பாரதி, உமையெனுந் தேவியர் உகந்தவான் பொருளாய், உலகெலாங் காக்கும் ஒருவனைப் போற்றுதல், இந்நான் கேயிப் பூமியி லெவர்க்கும் கடமை யெனப்படும்; பயணிதில் நான்காம்; அறம், பொருள், இன்பம், வீடெனு முறையே, தன்னை யாளுஞ் சமர்த்தெனக் கருள்வாய். மணக்குள விநாயகா! வான்மறைத் தலைவா! தனைத்தான் ஆளுந் தன்மைநான் பெற்றிடில் எல்லாப் பயன்களும் தாமே எய்தும்,