பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 ஒரு செய்தியாகும். 'அரியும், சிவனும் ஒண்ணு; அறியாதவன் வாயில் மண்ணு," என்ற எளிய தமிழ்ப் பழமொழி மிக எளிமையானதும், அதே சமயத்தில் ஒர் அற்புதமான உண்மையைக் காட்டுவதும் ஆகும். பாரதியாருக்கோ எல்லாத் தெய்வமும் ஒன்றே. ஆனல் அவருக்கும் ஓர் இஷ்ட தெய்வம் உண்டு. அந்த இஷ்ட தெய்வந்தான் பராசக்தி என்பது இந்நூலை வாசிப்பவர் களுக்கு நன்முக விளங்கும். அவர் அல்லாவைப் பற்றிப் பாடியிருக்கிருர்; இயேசு கிறிஸ்துவைப்பற்றிப் பாடியிருக் கிருர்; கண்ணன், முருகன்,சிவன், முத்துமாரி, கோவிந்தன், திருமகள், கலைமகள், மலைமகள், ஞாயிறு ஆகிய பல பல ஹிந்துத் தெய்வங்களையும் அழகாகப் பாடியிருக்கிருர் என்ற உண்மை, பாரதியும் கடவுளும் என்ற நூலை வாசிப்பவர்களுக்குத் தெளிவாக விளங்கும். ஆனல் தமது இஷ்டதெய்வமான பராசக்திமீதுதான் அதிகமாகப் பாடியிருக்கிரு.ர். 'சந்திரன் ஒளியில் அந்தப் பராசக்தியைக் கண்டேன்." என்றும், 'பராசக்தி நீ யாதுமாகி நிற்கின்ருய்; எங்கும் நீ நிறைந்தவள்; நானே நீ; நீயே நான் என்றும் ஓர் கவிதையில் பாடுகின்ருர். "யாதுமாகி நின்ருய்' என்று தொடங்கும் கவிதை மிக உயர்வானது. இசையுடன் பாடுவதற்கு ஏற்றது.) சந்திர ைெளியில் அவளைக் கண்டேன், சரணமென்று புகுந்து கொண்டேன், இந்திரி யங்களை வென்று விட்டேன், எனதென் ஆசையைக் கொன்று விட்டேன். I பயனெண் ணுமல் உழைக்கச் சொன்னள், பக்தி செய்து பிழைக்கச் சொன்னுள், துயரி லாதெனச் செய்துவிட்டாள், துன்ப மென்பதைக் கொய்து விட்டாள். 2