பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழறிஞர் கி. வா. ஜகந்நாதன் அவர்களின் அணிந்துரை தமிழில் கவிஞர்களுக்குப் பஞ்சம் இல்லை; அவர்கள் பாடிய கவிதைகளும் கொஞ்சம் அல்ல. வளர்ந்து படர்ந்த ஆலமரத்தின் நிழலிலே எந்தச் செடியும் வளம் பெற்று வளராது. அப்படி ஏதாவது ஒரு செடி வளருமானல் அதை ஒர் அற்புதம் என்றே சொல்ல வேண்டும். சங்ககாலத்துப் பாடல்களுக்குப் பிறகு வேறு பாடல்கள் தலை எடுக்கவில்லை. சில நூற்ருண்டுகளுக்குப்பின் சிலப்பதி காரம் முதலிய காப்பியங்கள் எழுந்தன. அவற்றுக்குப்பின் ஒரே இருள். கம்பன் தோன்றித் தன்னுடைய இராமாயணத் தால் தமிழில் ஒரு புதிய ஒளியைப் பரவ விட்டான். பொட்டலான பாலைவனத்திலே அமுதமழை பெய்ததைப் போல அது எங்கும் இன்பத்தைப் பரப்பியது. சாதி சமய வேறுபாடின்றித் தமிழர்கள் கம்பராமாயண அமுதக்கடலில் குளித்து இன்புற்ருர்கள். என்றும் இல்லாத கவிதைச் சுவையை நுகர்ந்தார்கள். மறுபடியும் ஒரு தேக்கம். அங்கும் இங்கும் சில மின்மினிப் பூச்சிகள் ஒளிவிட்டன. அந்த ஒளி இருளைப் போக்குமா? என்ருலும் செறிந்த இருளினிடையே அவற்றின் ஒளி சிறிது ஆறுதல் அளித்தது. பசியால் அவதியுறும் ஒருவனுக்குக் கடலைச் சுண்டல் கிடைத்ததுபோலே கிடைத்தது. அதை மென்று சுவை பார்த்தனர் தமிழர்கள். வயிறு நிரம்பவில்லை. ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டுக் கிடந்த பாரதத்தில் கலையும் கவிதையும் மங்கிக் கிடந்தன. எங்கும் ஆங்கில