பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 ஆனல் காளி காதலைப்பற்றிக் கூறும்போது, 'இவள் அன்னை வடிவமடா, இவள் இன்னருள். வேண்டுமடா, அத்தனை கோடி பொருளினுள்ளே நின்று வில்லை அசைப் பவளைத் தோத்திரம் பாடித் தொழுதிடுவோம்’ என்கிருர் பாரதியார். காதல்கொண்டேன் என்று கூறத் துணிய வில்லை பாரதியார் என்பது மிகக் கவனத்திற்குரியது. வியாழக்கிழமை தோறும் புதுசேரியில் துய்ப்ளேக்ஸ் சிலையின் முன்னே பாண்டு வாசிப்பது வழக்கமாம். உச்சஸ்தாயியில் வாசித்துக் கொண்டிருந்துவிட்டு, உடனே கீழ்ஸ்தாயிக்கு பாய்கிறது இந்த மேல்நாட்டு சங்கீதம். "இந்த மாதிரி சங்கீதம் நமது பாடல்களுக்கும் அமைத்தால் நன்ருக இருக்குமா?’ என்ற கேள்வி பிறந்தது. அதற்கு பாரதியார் 'பாடும் வகையில் பாடினல் நன்முக இருக்கும். நாளைக்கு ஸரஸ்வதி பண்டிகை ஆதலால், இந்த மெட்டில் ஒருபாடல் இயற்றப் போகிறேன்" என்ருராம். அந்த வகையில் இசையமைப்பு உருவாகியிருக்கிறது இந்த மூன்று பாடல்களுக்கும். இந்தச் சுவையான செய்தியைப் பற்றி, பாரதி நினைவுகள்' என்ற திருமதி யதுகிரி அம்மாளின் நூலில் வெளியிட்டிருக்கிரு.ர்.) முதலாவது-சரஸ்வதி காதல் பிள்ளைப் பிராயத்திலே - அவள் பெண்மையைக் கண்டு மயங்கி விட்டேனங்குப் பள்ளிப் படிப்பினிலே - மதி பற்றிட வில்லை யெனிலுந் தனிப்பட வெள்ளை மலரணைமேல் - அவள் வீணையுங் கையும் விரிந்த முகமலர் விள்ளும் பொருளமுதும் - கண்டேன் வெள்ளை மனது பறிகொடுத் தேனம்மா! I