பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 "இவரும் இவரது கூட்டாளிகளும் கடல்மீது எத்தனையோ ஆயிரம் காதம் கடந்து போய் இத்தேசத்தின் பெயர் கேட்டவுடனே அந்நியர்கள் முடி வணங்குமாறு செய்யும் நன்மைக்கு நம்மவர்களால் என்ன கைம்மாறு செய்ய முடியும்? இந்த மகான்கள் தாம் என்ன கைம்மாறை எதிர் பார்க்கிருர்கள்? யாதொரு பற்று மில்லாமல், இரந்து உண்பவர்களாய் உலகத்தாரின் ஞான வழிக்கு ஏற்பட்டிருக்கும் மாயையாகிய குருட்டுத் தன்மையை நீக்கி, ஒளியளிக்க வேண்டுவதே கடமையாகக் கொண்டு நாள் கழித்துவரும் இப்பெரியார்களுக்கு உலகம் அளக்கத் தகாதவாறு கடமைப்பட்டிருக்கிறது.” எவ்வாறேனும் பாரத தேசத்தின் மதிப்பு உயர வேண்டும் என்ற பாரதியாரின் ஆவல் இங்கே தொனிக் கின்றது. சுருதியும் அரிய உபநிட தத்தின் தொகுதியும் பழுதற உணர்ந்தோன், கருதிடற் கரிய பிரமநன் னிலையைக் கண்டுபே ரொளியிடைக் களித்தோன், அரிதினிற் காணும் இயல்பொடு புவியின் அப்புறத் திருந்து நண்பகலில் பரிதியி ைெளியும் சென்றிடா நாட்டில் மெய்யொளி பரப்பிடச் சென்ருேன். I வேறு ஒன்றேமெய்ப் பொருளாகும்: உயிர்களெலாம் அதன் வடிவாம் ஒருங்காலை; என்தேவன் உன்தேவன் என் றுலகர் பகைப்பதெலாம் இழிவாம் என்று,