பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 விவேகானந்தரின் தர்மபுத்திரியாகிய நி வே தி தா தேவியைச் சந்தித்தார். உடனே பாரதியார் வாழ்க்கை அடியோடு மாறிவிடுகின்றது. ஆகையில்ைதான், தாம் எழுதி வெளியிட்ட முதல் இரண்டு நூல்களையும் நிவேதிதா தேவிக்கு சமர்ப்பணம் செய்திருக்கிரு.ர். நிவேதிதா தேவி ஒர் ஆங்கில மாது. இவர் இயற் பெயர் மார்கரட் இ. நோபிள் என்பதாகும். அவர் ஸ்வாமி விவேகானந்தரின் உணர்ச்சிமிக்க சொற்பொழிவைக் கேட்டுப் பழம்பெரும் புனிதபூமியான பாரதநாட்டிற்குத் தொண்டுபுரிவதே தமது வாழ்க்கையின் லட்சியம் என மேற்கொண்டவராகும். மேலும் 'gகிருஷ்ணன் அர்ஜூனனுக்கு விசுவரூபம் காட்டி ஆத்தும நிலை விளக்கியதொப்ப, எனக்கு பாரத தேவியின் சம்பூர்ண ரூபத்தைக் காட்டி, ஸ்வதேச பக்தி யுபதேசம் புரிந்தருளிய குருவின் சரண மலர்களில் இச் சிறு நூலை சமர்ப்பிக்கிறேன்.” என்று பாரதியார் சமர்ப்பணம் செய்திருக்கிரு.ர். 1909-ல் பாரதியார் பாண்டிச்சேரி சென்ற பிறகு ஜன்ம பூமி என்ற பெயரில் ஸ்வதேச கீதங்கள் என்ற நூலுக்கு இரண்டாம் பாகம் வெளியிட்டார். அதையும் அவர் தமது குருமணியாகிய நிவேதிதா தேவிக்கு சமர்ப் பணம் செய்திருக்கிருர். அதன் வாசகம் வருமாறு : "எனக்கு ஒரு கடிகையிலே மாதாவினது மெய்த் தொண்டின் தன்மையையும், துறவுப் பெருமையையும் சொல்லாமலுணர்த்திய குருமணியும், பகவான் விவேகானந் தருடைய தர்மபுத்திரியும் ஆகிய நிவேதிதா தேவிக்கு இந் நூலைச் சமர்ப்பிக்கிறேன்-ஸி. சுப்பிரமணிய பாரதி.”