பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 காளி வலியசா முண்டி - ஒங் காரத் தலைவியென் னிராணி - பல நாளிங் கெனையலைக்க லாமோ? . உள்ளம் நாடும் பொருளடைதற் கன்ருே! - மலர்த் தாளில் விழுந்தபயங் கேட்டேன் - அது தாரா யெனிலுயிரைத் தீராய் - துன்பம் நீளில் உயிர்தரிக்க மாட்டேன் - கரு நீலியென் னியல்பறி யாயோ? தேடிச் சோறுநிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பலசெயல்கள் செய்து - நரை கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போலே - நான் வீழ்வே னென்று நினைத் தாயோ? நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் . அவை நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும் மூளா தழிந்திடுதல் வேண்டும் - இனி என்னைப் புதிய வுயிராக்கி - எனக் கேதுங் கவலையறச் செய்து - மதி தன்னை மிகத்தெளிவு செய்து - என்றும் சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய். தோளை வலிவுடைய தாக்கி - உடற் சோர்வும் பிணிபலவும் போக்கி - அரி வாளைக் கொண்டுபிளந் தாலும் - கட்டு மாரு வுடலுறுதி தந்து சுடர்