பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 6. தின்ன வரும்புலி தன்னையும் அன்பொடு சிந்தையிற் போற்றிடுவாய் - நன்னெஞ்சே! அன்னை பராசக்தி யவ்வுரு வாயினள் அவளேக் கும்பிடுவாய் - நன்னெஞ்சே! (பகைவ) 20. யேசுகிறிஸ்து-அல்லா (குறிப்பு : யேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட மூன்ரும் நாள் உயிர்பெற்று எழுந்திருக்கிருர் என்பதற்கு பாரதியார் ஒர் புதிய விளக்கம் இக் கவிதையிலே கொடுத்திருக்கிருர். எல்லாத் தெய்வமும் ஒன்றுதான். அவனை யேசு என்னலாம், அல்லா என்னலாம். இதில் சமயப்பூசலுக்கு இடமேயில்லை என்பதற்கு பாரதியார் பாடல் நல்ல எடுத்துக்காட்டகும். இஸ்லாம் மார்க்கத்தின் மகிமை என்ற ஒரு சொற்பொழிவையே பொட்டல்புதூரில் நிகழ்த்தியிருக்கிருர். நமது இஷ்ட தெய்வமாகிய பராசக்தியைப்பற்றி பல சிறந்த கவிதைகளை இயற்றியிருக் கின்ருர் என்ருலும், யேசு கிறிஸ்து, அல்லா முதலிய தெய்வங்களில் யாதொரு ஏற்றமோ, தாழ்வோ யில்லை என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகக் கீழ் வ ரு ம் கவிதைகள் அமைந்திருக்கின்றன. பொட்டல் புதுரரில் நிகழ்த்திய சொற்பொழிவில், தாம் பாடிய அல்லா அல்லா அல்லா என்ற பாடலைப் பாடியப் பின்னரோ அச் சொற் பொழிவைத் தொடங்குகிருர் பாரதியார். என்பது கவனிக்கத்தக்கது.) ஈசன் வந்து சிலுவையில் மாண்டான், எழுந்துயிர்த்தனன் நாள் ஒரு மூன்றில் நேசமா மரியா மக்த லேநா நேரிலே இந்தச் செய்தியைக் கண்டாள்.