பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Sl என்று காணவேண்டி, ரதத்தைச் சற்று முன்னல் ஒட்டிச் செல்லுமாறு வேண்டுகின்ருன் அர்ஜுனன். அப்பொழுது அவன் உள்ளம் சோர்ந்து விடுகின்றது. ஏனென்ருல், தனக்கு முன்னுல் நிற்பவர்களெல்லாம் நெருங்கிய உறவினர் கள் என்று தளர்ச்சியடைந்து, அம்பையும் வில்லையும் கீழே போட்டு விடுகின்ருன். 'இவ்வளவு பேர் நெருங்கிய உறவினர்களைக் கொன்றுவிட்டு, நான் ராஜ்யம் ஆளா விட்டால் என்ன? மீண்டும் வனவாசத்திற்கே சென்று விடலாம்' என்று, அர்ஜூனன் சொல்லுகின்ருன். இவ்வாறு மிதமிஞ்சிய இரக்கம் உள்ளவனுய் அர்ஜுனன் கலங்கி நிற்கிருன். அப்பொழுதுதான், ஒர் ஒப்பற்ற உண்மையைக் கண்ணன் வெளியிடுகின்றன். 'அர்ஜுன நீ வருந்துவது முற்றிலும் தவறு. எதிரிகளின் ஆன்மாவைப்பற்றி வருந்துகின்ருயா? அல்லது அவர்களின் உடலைப்பற்றி வருந்துகின்ருயா? இரண்டும் சரியல்ல. ஆன்மா என்றும் அழிவற்றது. அதைக் கத்தியால் வெட்டவும் தீயில்ை எரிக்கவும் முடியாது. உடலோ அழியும் இயல்பு வாய்ந்தது. நீ அழிக்காவிடினும் அது தானே அழிய வேண்டியதுதான். ஆன்மாவுக்கு ஒருடல் அழிந்ததும், மற்ருேருடல் தானே வந்து சேரும். ஆத்மாவின் இயற்கையை எண்ணி, உனக்கு ஏற்படுத்தப் பட்ட செயல்களை நீ செய்தே தீரவேண்டும். ஆகவே, செய்தலுன் டைனே - அறஞ் செய்தலுன் கடனே - அதில் எய்துறும் விளைவினில் எண்ணம் வைக்காதே ஆதலால், வில்லினை யெடடா! - கையில் வில்லிணை யெடடா! - அந்தப் புல்லியர் கூட்டத்தைப் பூழ்தி செய்திடடா!