பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vł சமரசம். தனக்கென்ற ஒரு வீட்டைப் படைத்தவன் பசிக்கும் போதெல்லாம் தன் வீட்டில் உண்ணுவான். எப்போதாவது வேறு நண்பர் வீட்டுக்குப் போனல் அங்கும் உண்ணுவது உண்டு. அப்படியின்றித் தனக்கென்று உண்ண வீடில்லாமல் உழலுபவன் பிச்சைக்காரன். தனக்கென்று நிலையான உபாசன மூர்த்தியைக் கொள்ளாதவர்கள் அத்தகையவர்களே. பாரதியார் பராசக்தியைத் தம்முடைய வழிபடுகடவுளாகக் கொண்டவர். ஆனல் மற்ற மூர்த்திகளிடத்தில் வெறுப்பின்றி அவற்றையும் பாடியிருக்கிருர். ஆதிசங்கரர் ஆறு மூர்த்திகளை வழிபடும் நெறிமுறைகளைச் செப்பம் செய்து அமைத்தார். அவர் காலத்துக்குப்பின் இந்தியாவில் வேறு பல சமயங்கள் புகுந்தன. கிறிஸ்தவம், இஸ்லாம் போன்ற மதங்கள் இங்கே வந்தன. அவை இங்கே வந்த பிறகு வந்த பாரதியாரின் சமரச உணர்வு அவற்றையும் தழுவிக் கொண்டன. ஏசு கிறிஸ்துவை யும் அல்லாவையும் அவர் பாடினர். விநாயகரைப் பாடும்போது அவரே எல்லாக் கடவுளுமாக இருக்கிருர் என்று சொன்னர். எதைப் பாடினலும் யாரைப் புகழ்ந்தாலும் பராசக்தி, "என்னைப்பாடு' என்று கேட்கிருளாம். ஆகையால் அ ந் த ப் பெருமாட்டியைச் சரண்புகுந்து, அவளுடைய புகழைப் பலபல வகையில் விரித்துப் பாடுகிரு.ர். 'பாரதியும் கடவுளும்' என்ற இந்த நூல், பாரதியாரின் உண்மையான சமரச நோக்கைப் புலப்படுத்தும் அருமையான நூல். கவிதையிலும் உரைநடையிலும் அவர் கடவுளைப்பற்றிச் சொல்லுவனவற்றை யெல்லாம் தொகுத்துவைத்துக் காட்டும் அரிய தொகுப்பு இது. பாரதியார் ஆழ்ந்த சக்தி பக்தர்: ஆல்ை அவர் மற்றத் தெய்வங்களையும் வாழ்த்தத் தெரிந்தவர். பாரதியார் அத்துவைத வேதாந்தி; ஆனால் கவிஞராகிய அவருக்கு எல்லாம் மாயை என்பதில் உடன்பாடு இல்லை. அவர் மூர்த் திகளை வழிபட்டு இன்புறுகிறவர்; ஆனல் வெறும் விக்கிரக வழிபாட் டோடு நிற்பதை அவர் விரும்பவில்லை,