பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 2. ஆலாலமுண்டவனடி சரணென்ற மார்க்கண்டன் . தன தாவி கவரப்போய் நீ பட்ட பாட்டினை (யறிகுவேன் - இங்கு நாலாயிரம் காதம் விட்டகல்!உனவிதிக்கிறேன் - ஹரி நாராயண கைநின் முன்னே உதிக்கிறேன் - அட (காலா) 25. மாயையைப் பழித்தல் (குறிப்பு : எல்லாம் மாயை என்கிற எண்ணம் பாரதி யாருக்கு உடன்பாடு இல்லை. இதைப் பல இடங்களிலேயே விளக்கியிருக்கிரு.ர். அப்படி உருவான கவிதைதான் இது.) உண்மை யறிந்தவர் உன்னைக் கணிப்பாரோ? மாயையே - மனத் திண்மை யுள்ளாரை நீ செய்வது மொன்றுண்டோ! - மாயையே! I எத்தனைகோடி படைகொண்டு வந்தாலும் மாயையே - நீ சித்தத் தெளிவெனுந் தீயின்முன் நிற்பாயோ? - மாயையே! 2 என்னைக் கெடுப்பதற் கெண்ணமுற்ருய் கெட்ட மாயையே! - நான் உன்னைக் கெடுப்ப துறுதியென் றேயுணர் - மாயையே! 3 சாகத் துணியிற் சமுத்திர மெம்மட்டு மாயையே! - இந்தத் தேகம் பொய் யென்றுணர் தீரரை யென் செய்வாய்! - மாயையே! 4.