பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 இருமை யழிந்தபின் எங்கிருப்பாய், அற்ப மாயையே! - தெளிந் தொருமை கண்டார் முன்னம் ஓடாது நிற்பையோ? - மாயையே! நீதரும் இன்பத்தை நேரென்று கொள்வனே மாயையே - சிங்கம் நாய்தரக் கொள்ளுமோ நல்லர சாட்சியை - மாயையே! என்னிச்சை கொண்டுனை யெற்றிவிட வல்லேன் மாயையே! - இனி உன்னிச்சை கொண்டெனக் கொன்றும் வராது காண் - மாயையே! யார்க்கும் குடியல்லேன் யானென்ப தோர்ந்தனன் மாயையே! - உன்றன் போர்க்கஞ்சு வேனே பொடியாக்குவேன் உன்னை - மாயையே! 26. சங்கு (குறிப்பு : செத்த பிறகு சிவலோகம், வைகுண்டம் சேர்ந்திடலாமென எண்ணியிருப்பவர் பித்தர் மனிதராம் என்கிருர் பாரதியார். இதைச் சங்கு கொண்டே வெற்றி முழக்கம் செய்வோம் என்கிருர் கவிஞர்.) செத்தபிறகு சிவலோகம் வைகுந்தம் சேர்ந்திடலா மென்றே எண்ணி யிருப்பார் பித்த மனிதர், அவர் சொலுஞ் சாத்திரம் பேயுரை யாமென்றிங் கூதேடா சங்கம்!